Published:Updated:

ரன்பீர் கபூர் - ஆலியா பட் காதல் ஜோடிக்கு ஏப்ரல் 17-ல் எளிய முறையில் திருமணம்... காரணம் என்ன?

ரன்பீர் கபூர் - ஆலியா பட்

ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம் வரும் 17-ம் தேதி நடக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ரன்பீர் கபூர் - ஆலியா பட் காதல் ஜோடிக்கு ஏப்ரல் 17-ல் எளிய முறையில் திருமணம்... காரணம் என்ன?

ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம் வரும் 17-ம் தேதி நடக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Published:Updated:
ரன்பீர் கபூர் - ஆலியா பட்

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். ஏற்கெனவே ரன்பீர் கபூர் காதலித்த கத்ரீனா கைஃப்பிற்குச் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் தனது திருமணத்தையும் உடனே நடத்த ரன்பீர் கபூர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு ஆலியா பட்டும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவர்களது திருமணம் ஏப்ரல் மாதத்தில் நடக்க இருப்பதாக முன்னரே செய்திகள் வெளியாகின. ஏற்கெனவே திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு வரும் விருந்தினர்களிடம் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலிருந்து திருமணத்தில் கலந்து கொள்ளும் வகையில் ப்ரீயாக இருந்து கொள்ளும்படி இரு தரப்பினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆலியா பட் | Alia Bhatt
ஆலியா பட் | Alia Bhatt

தற்போது இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் திருமணம் நடக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆலியாவின் தாத்தா ராஸ்தான் உடல்நிலை மோசமாக இருக்கிறது. இதனால் திருமண தேதியை முடிவு செய்வதில் சிக்கல் இருந்து வந்தது. ஆனால் ராஸ்தான் தனது பேத்தியின் திருமணத்தை பார்க்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். எனவே ஏப்ரல் 17ம் தேதி இத்திருமணத்தை நடத்த இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர். இதில் ஒரு நாள் முன்னால் அல்லது பின்னால் கூட இருக்கலாம். இன்னும் உறுதியான தேதி இறுதி செய்யப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலியா பட், ரன்பீர் கபூர்
ஆலியா பட், ரன்பீர் கபூர்

திருமணத்திற்கு மருதாணி வைப்பதற்காக மருதாணி கலைஞர் வீணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்கு நடிகர்கள் அதிக அளவில் அழைக்கப்படமாட்டார்கள் என்றும், திருமணம் எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் இரு குடும்ப தகவல்களும் தெரிவிக்கின்றன. திருமண நிகழ்ச்சிகள் இரண்டு நாள்கள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

செம்பூரில் உள்ள ஆர்.கே.ஸ்டூடியோ இருந்த இடத்தில்தான் திருமண நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. அதற்கான வேலைகளை ரன்பீர் கபூரும், ஆலியாவும் செய்து வருகின்றனர். திருமணம் பிரமாண்டமாக இருக்காது என்று இரு குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆலியாவின் தாத்தாவின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் மட்டுமே இந்தத் திருமணத்திற்கு அவசர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism