Published:Updated:

2 காதல் தோல்விகள்; தயங்கிய ரன்பீர்; விருது விழாவில் அறிவித்த ஆலியா! காதல் டு கல்யாணக் கதை!

ரன்பீர்

இது மிகவும் அழகானது. நான் இப்போது நட்சத்திரங்கள், மேகங்கள் மீது நடக்கிறேன் - ரன்பீர் கபூர்

2 காதல் தோல்விகள்; தயங்கிய ரன்பீர்; விருது விழாவில் அறிவித்த ஆலியா! காதல் டு கல்யாணக் கதை!

இது மிகவும் அழகானது. நான் இப்போது நட்சத்திரங்கள், மேகங்கள் மீது நடக்கிறேன் - ரன்பீர் கபூர்

Published:Updated:
ரன்பீர்

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்-ஆலியா பட் காதல் ஜோடிக்கு கடந்த 14-ம் தேதி திருமணம் நடந்தது. இத்திருமணத்தை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ரன்பீர் கபூர் வீட்டில் திருமண வரவேற்பும் நடத்தப்பட்டது. காதல் நாயகனான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இடையே காதல் மலர்ந்த கதை ஒரு சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் ரன்பீர் கபூர் நடிகை தீபிகா படுகோனேயை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். அதன் பிறகு மற்றொரு பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப்பை பல ஆண்டுகள் காதலித்தனர். ஆனால் அந்தக் காதலும் ரன்பீர் கபூருக்குக் கைகூடவில்லை. ரன்பீர் கபூர் காதலித்த இரண்டு பெண்களுமே வேறு ஒரு நடிகரை காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். தற்போது ரன்பீர் கபூரும் திருமணம் செய்து கொண்டார். ஆரம்பித்திலிருந்தே தனது காதல் குறித்து பல இடங்களில் ரன்பீர் கபூர் பல இடங்களில் பேசத் தயங்கியிருக்கிறார்.

11 வயதிலேயே ரன்பீரைப் பிடிக்கும்

நடிகை ஆலியா பட்டை பொருத்தவரை தனக்கு 11 வயதிலிருந்த ரன்பீர் கபூரைப் பிடிக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டம்
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் பிறகு ரன்பீர் கபூர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவி இயக்குனராக இருந்தார். அப்போது பிளாக் என்ற படத்தின் நடிகர், நடிகை தேர்வு மற்றும் படப்பிடிப்பு ஒத்திகைக்காக ஆலியா பட் சென்றிருக்கிறார். அங்கு தான் 11வது வயதில் இருந்து தனக்குப் பிடித்தமான ரன்பீர் கபூரை முதன்முறையாகக் கண்டார். அப்போதே அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு விட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் `பிரம்மாஸ்த்ரா' படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பதாக வந்த செய்தியை தொடர்ந்து இருவரும் காதலிப்பதாகச் செய்தி பரவியது. ஏற்கெனவே இரண்டு காதல் தோல்வியில் முடிந்திருந்ததால் ஆலியா விஷயத்தில் ரன்பீர் கபூர் அவசரப்பட்டு எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஆலியா பட்டின் ஹைவே படத்தை விளம்பரப்படுத்த ஆலியா பட் ரன்பீர் கபூருடன் சேர்ந்தே வந்தார். அதன் பிறகு 2018-ம் ஆண்டு நடிகை சோனம் கபூர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஆலியா பட்டுடன் ரன்பீர் கபூர் ஒன்றாக கலந்துகொண்டு தனது காதலை இருவரும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினர்.

ரன்பீர்-ஆலியா பட்
ரன்பீர்-ஆலியா பட்

அதே ஆண்டு பத்திரிகை நிருபர் ஒருவரின் கேள்விக்கு தான் ஆலியாபட்டை காதலிப்பதாக வெளிப்படையாக ரன்பீர் கபூர் தெரிவித்தார். தங்களது காதல் புதிது என்றும், அது குறித்து மேற்கொண்டு பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அதன் பிறகுதான் ஆலியா பட் தனது காதலை வெளிப்படையாக கூற ஆரம்பித்தார். பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எங்களுக்கு இடையிலானது உறவு கிடையாது. இது ஒரு நட்பு. இதை நான் உண்மையுடனும், நேர்மையுடனும் சொல்கிறேன். இது மிகவும் அழகானது. நான் இப்போது நட்சத்திரங்கள், மேகங்கள் மீது நடக்கிறேன்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அதன் பிறகு ஆலியா பட் கபூர் குடும்பத்துடன் இணைய ஆரம்பித்துவிட்டார். நடிகர் ரிஷி கபூர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரைக் காண ரன்பீர் கபூருடன் ஆலியா பட்டும் அமெரிக்கா சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நியூயார்க்கில் ரன்பீர் கபூர் தாயார் நீது கபூர் மற்றும் மகள், மருமகன் ஆகியோரும் இருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து புத்தாண்டைக் கொண்டாடினர். 64வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் ஆலியா பட்டிற்கு சிறந்த நடிகை விருது அறிவித்தவுடன் ஆலியா பட் அருகில் அமர்ந்திருந்த ரன்பீர் கபூர் அவருக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதோடு மேடையில் ஆலியா பட் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கிய பிறகு, அளித்த பேட்டியில், ரன்பீர் கபூரைக் காட்டி அவரை காதலிப்பதாகத் தெரிவித்தார். அவர்களது காதலை இருவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர். இதனால் ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் தங்களது குடும்பத்துடன் ஆப்பிரிக்காவில் கென்யாவிற்கு குடும்பச் சுற்றுலா சென்று வந்தனர். அவர்கள் குடும்பத்தோடு விலங்குகள் சரணாலயத்தை பார்வையிட்டு வந்தனர். இப்போது இருவரும் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டனர். ஆலியாவின் சிறு வயது கனவு நிறைவேறியது. இருவரும் தங்களது தேனிலவையும் தென்னாப்பிரிக்காவில் கொண்டாட இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism