Published:Updated:

“ரூ.2 கோடிக்கு நடித்துவிட்டு ரூ.200 கோடி வாங்கிக் கொள்கிறார்!"- ஆமிர் கானை விமர்சித்த கங்கனா

கங்கனா ரணாவத், ஆமிர்கான்

சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கனா ரணாவத் ‘லால் சிங் சத்தா' தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.

Published:Updated:

“ரூ.2 கோடிக்கு நடித்துவிட்டு ரூ.200 கோடி வாங்கிக் கொள்கிறார்!"- ஆமிர் கானை விமர்சித்த கங்கனா

சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கனா ரணாவத் ‘லால் சிங் சத்தா' தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.

கங்கனா ரணாவத், ஆமிர்கான்
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அரசியல், சினிமா என்று தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பவர். இந்நிலையில் கங்கனா தற்போது நடிகர் ஆமிர் கானை விமர்சித்திருக்கிறார்.

ஆமிர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லால் சிங் சத்தா'. இப்படம் 1994-ல் வெளியாகிச் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்ற 'Forrest Gump' என்ற ஹாலிவுட் படத்திலிருந்து ரீ-மேக் செய்யப்பட்டிருந்தது.

இந்தியா முழுவதும் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியான  இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாதது குறித்துப் பலரும் விமர்சித்து வந்தனர். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கனா ரணாவத் ‘லால் சிங் சத்தா' தோல்வி குறித்துப் பேசியிருக்கிறார். இன்றைய பார்வையாளர்கள் விழிப்படைந்திருக்கிறார்கள். அதனால்தான் புறக்கணிப்பு கலாசாரம் வந்துவிட்டது.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

ஆமிர் கானின் `லால் சிங் சத்தா' போன்ற படங்களைப் பார்ப்பதற்காக பார்வையாளர்கள் ஏன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை செலவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி. 2 கோடி ரூபாய்க்கு இணையான நடிப்பை கொடுத்து விட்டு 200 கோடி ரூபாயை  வாங்கிக் கொள்கிறார். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவர் தனது படங்களுக்கு 200 கோடி ரூபாய் வசூலிக்கிறார். ஏன் இந்த அநியாயமான நடைமுறை இன்னும் இண்டஸ்ரியில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அமீரின் `லால் சிங் சத்தா' திரைப்படம் தோல்வியடைந்தது புறக்கணிப்பு கலாசாரத்தால் அல்ல என்றும் இந்தியாவுக்கு எதிரான அவரது கருத்துக்களால்தான் என்றும் கங்கனா ரணாவத் ஆமிர் கானை விமர்சித்திருக்கிறார்.