Published:Updated:

வெப்சீரிஸ் படப்பிடிப்பில் காலை உடைத்துக்கொண்ட ஷில்பா ஷெட்டி - நடந்தது என்ன?

ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பாஷெட்டி வெப் சீரிஸ் படப்பிடிப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது தன் காலை உடைத்துக்கொண்டார். இது குறித்து அவர் பகிர்ந்த படம் வைரலாகி வருகிறது.

வெப்சீரிஸ் படப்பிடிப்பில் காலை உடைத்துக்கொண்ட ஷில்பா ஷெட்டி - நடந்தது என்ன?

நடிகை ஷில்பாஷெட்டி வெப் சீரிஸ் படப்பிடிப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது தன் காலை உடைத்துக்கொண்டார். இது குறித்து அவர் பகிர்ந்த படம் வைரலாகி வருகிறது.

Published:Updated:
ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி தனது 47 வயதிலும் ரியாலிட்டி ஷோக்கள், வெப் சீரிஸ், திரைப்படங்கள் என நிறையவே நடித்து வருகிறார். புதிதாக 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் சீரீஸில் நடித்து வருகிறார். இந்தத் தொடரை ஹிட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி தன்னுடைய 'காப் யுனிவர்ஸின்' ஓர் அங்கமாக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது ஷில்பா ஷெட்டி தனது ஒரு காலை உடைத்துக்கொண்டார். காலை உடைத்துக்கொண்டு கட்டுப்போட்டு வீல் சேரில் ஷில்பா ஷெட்டி அமர்ந்தபடி இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி

இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "உண்மையிலேயே காலை உடைத்துக்கொண்டேன். இன்னும் 6 வாரங்களுக்கு தன்னால் படப்பிடிப்புகளில் பங்கேற்க முடியாது. விரைவாகக் குணமடையப் பிரார்த்தியுங்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், "இன்னும் வலுவான, சிறப்பான முறையில் திரும்ப வருவேன்" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஷில்பா ஷெட்டி இதே வெப் சீரிஸுக்காக சண்டைக் காட்சி ஒன்றில் நடிப்பது போன்ற ஒரு வீடியோவையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். ரிஸ்கான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி

'இந்தியன் போலீஸ் போர்ஸ்' வெப் சீரிஸில் சித்தார்த் மல்ஹோத்ரா, விவேக் ஒபேராய், ஈஷா தல்வார் போன்றோரும் நடித்துள்ளனர். இந்த வெப் சீரியஸ் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

ஷில்பா ஷெட்டி இந்த வெப் சீரிஸ் தொடர்பாகக் கடந்த ஏப்ரல் மாதமே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அவரின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கி சிறைக்குச் சென்றார். இதனால் அவர் சிறையிலிருந்து வெளியில் வரும் வரை ஷில்பா ஷெட்டி எந்தப் படப்பிடிப்பிலும் பங்கேற்காமலிருந்தார். இப்போது முழு வேகத்தில் நடித்து வருகிறார். 'சுக்கே' என்ற இந்திப் படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.