Published:Updated:

Boycott அழைப்பால் தவிக்கும் பிரபலங்கள்; ஆமிர் கானைத் தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கிளம்பும் எதிர்ப்பு

ஷாருக்கான்

ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்த ஒரு கருத்தை சுட்டிக்காட்டி ஆமீர் கான் படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்திருந்தனர்.

Boycott அழைப்பால் தவிக்கும் பிரபலங்கள்; ஆமிர் கானைத் தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கிளம்பும் எதிர்ப்பு

ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்த ஒரு கருத்தை சுட்டிக்காட்டி ஆமீர் கான் படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்திருந்தனர்.

Published:Updated:
ஷாருக்கான்

நடிகர் ஆமிர் கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோரின் லால் சிங் சத்தா, ரக்‌ஷா பந்தன் படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த இரண்டு படங்களும் வசூலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகின ஆமிர் கான் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ள லால் சிங் சத்தாவை மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் 50 கோடியை எட்டவில்லை. அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் அதை விட மோசமாகவே இருக்கிறது. இப்படத்தின் தோல்வியால் கனடாவிற்கு சென்றுவிடுவது குறித்துக்கூட பரிசீலித்ததாக அக்‌ஷய் குமார் பேட்டி ஒன்றில் மிகவும் விரக்தியுடன் தெரிவித்திருந்தார்.

aamir khan
aamir khan

இப்படங்கள் தோல்வியைத் தழுவுவதற்கு முக்கிய காரணம் இரண்டு படங்களையும் புறக்கணிக்கும்படி சோசியல் மீடியாவில் அழைப்பு விடுக்கப்பட்டது காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்த ஒரு கருத்தை சுட்டிக்காட்டி ஆமீர் கான் படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்திருந்தனர். ரக்‌ஷா பந்தன் படத்திற்கு கதை எழுதிய கனிகா டில்லன் இதற்கு முன்பு இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளத்தில் அவற்றை தெரிவித்திருந்தார். அவற்றை காரணம் காட்டி ரக்‌ஷா பந்தன் படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். படம் வெளியாகும் முன்பே கனிகா டில்லன் தனது சோசியல் மீடியாவில் இருந்து தான் தெரிவித்திருந்த கருத்துக்களை அப்புறப்படுத்தினார். அப்படி இருந்தும் சமூக வலைத்தள புறக்கணிப்பு அழைப்பால் இரண்டு படங்கள் குறித்த எதிர்மறை எண்ணம் பரவியதும் படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என படக்குழு கருதுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது இந்த சோசியல் மீடியா புறக்கணிப்பு நடிகர் ஷாருக்கானின் பதான் படம் பக்கம் திரும்பி இருக்கிறது. 'பாய்காட் பதான் மூவி' என்ற பெயரில் டிவிட்டரில் ஹேஸ்டேக் பகிரப்பட்டுள்ளது. தற்போது இது டிரண்டிங் ஆகி வருகிறது. இதனால் ஷாருக் கான் அதிர்ச்சியடைந்துள்ளார். ஷாருக் கான், `நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகத்' தெரிவித்திருப்பது போன்ற ஒரு வீடியோவைப் பகிர்ந்து பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை தயாரித்து வரும் யஷ்ராஜ் பிலிம்ஸ் நிர்வாகம் கவலையில் ஆழ்ந்திருக்கிறது. பாலிவுட் படங்கள் தோல்வி அடைவதற்கு ஜிஎஸ்டி வரியும் ஒரு காரணம் என்று இயக்குனர் அனுராக் காய்ஷப் தெரிவித்துள்ளார்.