பாலிவுட்டில் நடிகர்கள் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களுக்கு போட்டியாக நடிகைகளும் சம்பளத்தை அதிகரித்து வாங்குகின்றனர் என்ற செய்திகள் பாலிவுட் வட்டாரத்தில் அடிபடுகின்றன. இதையொட்டிய பட்டியல் ஒன்றை வெளியிட்டியிருக்கிறது வட இந்திய மீடியாக்கள். நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் என்பது படத்தின் பட்ஜெட், அவர்களின் முந்தைய படத்தின் வெற்றி என பல விஷயங்களை உள்ளடக்கியது. தற்போது பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் ஒரு படத்திற்கு 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இரண்டாவது இடத்தில் இருப்பவர் கங்கனா ரணாவத்.
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையாக விளங்கும் கங்கனா ரணாவத் ஆக்ஷன் படங்கள், வரலாற்று படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பாலிவுட்டில் வெற்றி நாயகியாக வலம் வரும் கங்கனா ஒரு படத்திற்கு அதிக பட்சமாக 27 கோடி வரை வாங்குகிறார். இதில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இரண்டையும் கலக்கும் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார். தனது கணவருடன் அதிகமான நாள்களை அமெரிக்காவில் கழிக்கும் பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு 15 கோடியில் இருந்து 25 கோடி வரை படத்திற்கு தக்கபடி, படப்பிடிப்பு நாட்களை கணக்கிட்டு அதற்கு தக்கபடி சம்பளம் வாங்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில் வெளிவந்த கங்குபாய் படத்தில் நடித்துள்ள அலியாபட் நான்காவது இடத்தில் இருக்கிறார். அலியாபட் ஒரு படத்திற்கு 23 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒரு படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி 15 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். பாலிவுட்டில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகை கரீனா கபூர் இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகும் இன்னும் முன்னணி கதாநாயகி வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஒரு படத்தில் நடிக்க 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஒரு படத்தில் சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. கிரிக்கெட் வீரர் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் ஒரு படத்தில் நடிக்க 7 கோடியிலிருந்து 10 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். ஹீரோக்களில் அக்ஷய் குமார் முதலிடத்தில் இருக்கிறார் என்கின்றனர்.