Published:Updated:

வேலையில் பிஸியாக இருந்த தீபிகா படுகோன்; அலுவலகத்திற்குச் சென்று திருமண நாளைக் கொண்டாடிய ரன்வீர் சிங்

தீபிகா-ரன்வீர் ஜோடி

திருமண நாளிலும் நடிகை தீபிகா படுகோன் பிஸியாக இருந்ததால் அவர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று கணவர் ரன்வீர் சிங் ஆச்சரியம் கொடுத்துள்ளார்.

Published:Updated:

வேலையில் பிஸியாக இருந்த தீபிகா படுகோன்; அலுவலகத்திற்குச் சென்று திருமண நாளைக் கொண்டாடிய ரன்வீர் சிங்

திருமண நாளிலும் நடிகை தீபிகா படுகோன் பிஸியாக இருந்ததால் அவர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று கணவர் ரன்வீர் சிங் ஆச்சரியம் கொடுத்துள்ளார்.

தீபிகா-ரன்வீர் ஜோடி
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கை ஆறாண்டுகள் காதலித்து 2918-ம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார். இத்திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

தீபிகா படுகோனுடன் திருமணம் செய்து கொண்ட பாலிவுட் ஜோடிகள் குழந்தைகள் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்துள்ளனர். ஆனால் தீபிகா படுகோன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து முடிவு செய்யாமல் இருக்கிறார். சமீபத்தில் தீபிகாவும் அவரின் கணவர் ரன்வீர் சிங்கும் பிரியப்போவதாகச் செய்திகள் வெளியாகின. இச்செய்திக்கு ரன்வீர் சிங் முற்றுப்புள்ளி வைத்தார். சமீபத்தில் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இச்ஜோடி நேற்று தங்களது 4-வது திருமண நாளைக் கொண்டாடியது. திருமண நாளில் தன் கணவருடன் சேர்ந்து திருமண நாளைக் கொண்டாடாமல் காலையில் எழுந்தவுடன் வேலைக்குச் சென்றுவிட்டார் தீபிகா படுகோன்.

ரன்வீர் சிங் வெளியிட்ட புகைப்படம்
ரன்வீர் சிங் வெளியிட்ட புகைப்படம்

சமீபத்தில் தீபிகா படுகோன் 82°E. என்ற பெயரில் சருமப் பராமரிப்பு கிரீம்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது அக்கம்பெனியின் வேலையில் தீபிகா படுகோன் தீவிரம் காட்டிவருகிறார். திருமண நாளிலும் அந்த வேலையாக அலுவலகம் சென்றுவிட்டார். ஆனால் ரன்வீர் சிங் நேராக தன் மனைவியின் அலுவலகத்திற்கே சென்றுவிட்டார். அங்கு சென்று தன் மனைவிக்கு ஆச்சரியம் கொடுத்ததோடு திருமண நாளையும் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். தீபிகா படுகோன் அலுவலகத்தில் மிகவும் பிஸியாக வேலையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை ரன்வீர் சிங் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். தீபிகா படுகோனின் புதிய முயற்சிக்கும் ரன்வீர் சிங் ஆதரவாக அடிக்கடி கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார். தற்போது தீபிகா படுகோன் நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து பதான் படத்தில் நடித்துள்ளார். இது தவிர நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் சேர்ந்து பைட்டர் படத்திலும் நடித்துவருகிறார் தீபிகா படுகோன்.