Published:Updated:

`ஃப்ரேய்ட்' ஜீன்ஸ்.. கார்செட்.. பட புரொமோஷனுக்காக மெனக்கெடும் தீபிகா படுகோன்!

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் ( instagram )

தீபிகா படுகோன் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் உடையணிந்து வருகிறார்.

ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட `சபாக்' திரைப்படம் வருகிற ஜனவரி 10-ம் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்துக்கு பல வகையிலும் புரொமோஷன் வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்`சபாக்' குழுவினர்.

இப்படத்தின் `டீஸர்', போஸ்டர்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்துகொண்டிருக்கும் தீபிகா படுகோன், ஷூட்டிங்கின்போது எடுத்த சிறு சிறு வீடியோக்களை `தீபிசம் டே-1, டே -2' என ஒவ்வொன்றாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றிவருகிறார்.

படத்திலும், நிஜத்திலும் அழகுப் பதுமையாக வலம்வரும் தீபிகா, சமூகத்தின் மீதான தன் அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக மேக்கப் போட்டு நடித்துள்ளார்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
instagram

பெண்களின் பாதுகாப்பு குறித்த வலுவான கருத்தை வலியுறுத்தும் இப்படத்தை, மக்களுக்குக் கொண்டு செல்வதிலும் முனைப்புடன் இருக்கிறார் தீபிகா.

தன்னுடைய தினசரி நிகழ்வுகளைக்கூட முடிந்தமட்டும் `சபாக்' பட புரொமோஷனுக்கான பதிவாக இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்துகொண்டிருக்கும் தீபிகா படுகோன், இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமான வித்தியாச உடைகளை அணிந்துவருகிறார்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
hindi.indiatvnews

இப்படத்தின் புரொமோஷனுக்காக, பேன்டின் கால் பகுதியில் நூல்கள் தொங்கக்கூடிய வெள்ளை நிற `ஃப்ரேய்ட்' ஜீன்ஸ், அதே நிறத்தில் லூஸான டி - ஷர்ட் மற்றும் அளவில் பெரிதான டெனிம் கோட், பேஜ் கலர் ஷூ, கோல்டன் கலர் கம்மல், செயின் என வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார்.

நேற்று, ஜுஹு பீச்சில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியிலும், தொளதொளவென இருக்கும் `ஹை வெயிஸ்ட்' ஜீன்ஸ், வெள்ளை நிற `பேகி ஷர்ட்' , கைகளில் சுற்றப்பட்ட கோல்டன் செயின் என வந்திருந்தார் தீபிகா.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
socialnews.xyz

இவற்றுக்கெல்லாம் ஹைலைட்டாக, உடல்வாகை ஷேப்பாக காட்டக்கூடிய `கார்செட்' எனப்படும் உள்ளாடையை, தன் சட்டையின் மேல் அணிந்துவந்தார்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
socialnews.xyz

சமூகத்துக்குத் தேவையான கருத்தை வலியுறுத்தும் படத்தை மக்களிடம் கொண்டுசெல்ல, இப்பட புரொமோஷன்களுக்கு தீபிகா சற்று அதிகமாகவே மெனக்கெடுவதாகத் தெரிகிறது.

பாராட்டுகள் தீபிகா!

பின் செல்ல