Published:Updated:

XXX வெப் சீரியஸில் ஆபாசக் காட்சிகள்; தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு கோர்ட் கைது வாரண்ட்!

ஏக்தா கபூர்

வெப் சீரியஸில் ராணுவ வீரர் கதாபாத்திரம் ஒன்றின் மனைவியை ஆபாசமாக சித்தரித்தது தொடர்பாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயாருக்கு கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது.

தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சொந்தமாக பாலாஜி டெலிபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நடிகை ஏக்தா கபூர் ஏராளமான டெலிவிஷன் சீரியஸ், திரைப்படங்கள் தயாரித்துள்ளார். தயாரித்தும் வருகிறார். தற்போது XXX என்ற வெப் சீரியஸ் ஒன்றை தயாரித்துள்ளார். இது ஒடிடி தளத்தில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த வெப் சீரியஸில் ராணுவ வீரரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து இருப்பதாகக் கூறி பீகாரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சம்பு குமார் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வெப் சீரியஸின் சீஸன் 2ல் ராணுவ வீரரின் மனைவிக்கு எதிராக பல ஆட்சேபகரமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், இது ராணுவ வீரர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இம்மனுவில் ஏக்தா கபூர் மட்டுமல்லாது அவரது தாயார் ஷோபா கபூரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

XXX வெப் சீரியஸில் ஆபாசக் காட்சிகள்; தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு கோர்ட் கைது வாரண்ட்!

பாலாஜி டெலிபிலிம் நிறுவனத்தில் ஷோபா கபூரும் பங்குதாரராக இருக்கிறார். 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இம்மனு இதற்கு முன்பு விசாரணைக்கு வந்த போது கோர்ட்டில் ஆஜராகும்படி இருவருக்கும் பீகார் மாநிலம் பெகுசராய் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதேசமயம் ஏக்தா கபூர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் XXX சீரியஸில் ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவர்கள் இருவருக்கும் கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு இருக்கிறது.