Published:Updated:

"நான் எடுத்த முடிவுகளை யாரும் எடுக்கக்கூடாது" - கடந்தகாலம் குறித்து சன்னி லியோன்!

சன்னி லியோன்

"என்னுடைய வாழ்நாளில் நான் எடுத்த முடிவுகள் வேறு யாரும் எடுக்காதது. யாரும் அந்த முடிவுக்குபோவதை நான் வேண்டுவதில்லை" -சன்னி லியோன் தன்னுடைய கடந்தகாலம் பற்றி சொல்வது இதுதான்.

"நான் எடுத்த முடிவுகளை யாரும் எடுக்கக்கூடாது" - கடந்தகாலம் குறித்து சன்னி லியோன்!

"என்னுடைய வாழ்நாளில் நான் எடுத்த முடிவுகள் வேறு யாரும் எடுக்காதது. யாரும் அந்த முடிவுக்குபோவதை நான் வேண்டுவதில்லை" -சன்னி லியோன் தன்னுடைய கடந்தகாலம் பற்றி சொல்வது இதுதான்.

Published:Updated:
சன்னி லியோன்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தன்னுடைய கடந்த காலத்தையும் அதில், தான் கற்றுக்கொண்ட பாடங்களையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஆங்கில இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், "என்னுடைய வாழ்நாளில் நான் எடுத்த முடிவுகள் வேறு யாரும் எடுக்காதது. யாரும் அந்த முடிவுக்குப் போவதை நான் வேண்டுவதில்லை. ஆனாலும் நான் எனக்கு உண்மையாக இருந்தேன். அதுவொன்றே என் வாழ்நாளில் நான் எனக்காக செய்த சிறந்த விஷயமாக இருக்க முடியும். மற்றதெல்லாம் தானாக நடந்தது. நான் என்னிடம் போய் சொன்னதில்லை, நான் யார் என்பதை மற்றவர்களிடம் பொய்யாக சொன்னதில்லை" என்கிறார். அவர் மீண்டும் திரும்ப விரும்பாத வாழ்வின் நிகழ்வு, ஒரு கட்டம் அது.

Sunny Leone
Sunny Leone

மேலும், எவ்வாறு வாழ்க்கை நல்லவிதமாக அமைந்திருக்கிறது என்பது பற்றியும் பர்சனல் வாழ்கையும் தொழிலும் கூட நன்றாக செல்வதைப் பற்றியும் கணவர் டேனியல் வேப்பரோடு அடிக்கடி உரையாடுவதைக் குறிப்பிடுகிறார், "எங்களுடைய வாழ்க்கையின் சின்ன சின்ன பகுதிகளையும் நாங்கள் விரும்புகிறோம். எங்கள் குடும்பத்தை விரும்புகிறோம். குடும்பத்தோடு செலவழிக்கிற நேரத்தை விரும்புகிறோம். வேலை, தயாரிப்பு, மேக் அப், கிளாதிங் நிறைய விஷயங்கள் போய் கொண்டிருக்கின்றன. இது மகிழ்ச்சியான நேரம்" என்கிறார் சன்னி லியோன். தற்போது ஏஜென்ட் எம் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்த இணையத் தொடர் 'அனாமிகா' வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism