Published:Updated:

"மார்வெல்லின் சூப்பர் ஹீரோ படத்தில் ஷாருக்கானா, ஹிர்த்திக் ரோஷனா?"- டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஹீரோ பதில்

பெனடிக்ட் கம்பெர்பாட்ச், ஷாருக்கான்

மார்வெல்லின் தயாரிப்பில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் ஷாருக்கான் அல்லது ஹிர்த்திக் ரோஷன் இருவரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சுவாரசியமான பதிலளித்துள்ளார், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தின் ஹீரோ பெனடிக்ட் கம்பெர்பாட்ச்.

பிரபல ஹாலிவுட் நடிகரான பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடித்த மார்வெல்லின் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (Doctor Strange)' படம் வரும் மே 6-ல் வெளியாக உள்ளது. இப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என உலகமுழுவதும் திரையிடப்படவுள்ளது. இதையொட்டி நடிகர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் படத்தின் புரோமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது மார்வெல்லின் தயாரிப்பில் பாலிவுட்டில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் தனது பள்ளிப் படிப்பிற்குப் பிறகு இந்தியா வந்த அனுபவம் பற்றியும் பேசியிருந்தார்.

ஷாருக்கான், ஹிர்த்திக் ரோஷன்
ஷாருக்கான், ஹிர்த்திக் ரோஷன்

பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் ஹிர்த்திக் ரோஷன் என இருவருமே 'ரா-ஒன்', 'கிரிஷ்' என சூப்பர் ஹீரோ படத்தில் நடித்துள்ளனர். எனவே இருவரில் யார் ஹாலிவுட்டின் மார்வெல் தயாரிப்பில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் கொண்ட படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “Khan is great.” ஷாருக்கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பதிலளித்தார்.

மேலும் "நான் உங்கள் நாட்டை(இந்தியா) நேசிக்கிறேன், நான் உங்கள் கலாசாரங்களை விரும்புகிறேன். என் பள்ளிப் படிப்பை முடித்த இளமைப் பருவத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அங்கு இருந்தேன். ஆறு மாதங்கள் கற்பித்தல், ஆய்வு செய்தல் எனப் பயணம் செய்தேன். அப்போது மீண்டும் என் நாட்டிற்குத் திரும்புவதைத் தவிர்க்க விரும்பினேன். முதல் இந்திய சூப்பர் ஹீரோவை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், அதைக் கொண்டு வாருங்கள்" என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism