Published:Updated:

The Kashmir Files வருமானத்தைக் காஷ்மீர் பண்டிட்களுக்கு வழங்குங்கள்! - டெல்லி துணை முதல்வர்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தின் வருமானத்தைக் காஷ்மீர் பண்டிட்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள்' என்று கூறியிருக்கிறார்.

The Kashmir Files வருமானத்தைக் காஷ்மீர் பண்டிட்களுக்கு வழங்குங்கள்! - டெல்லி துணை முதல்வர்

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தின் வருமானத்தைக் காஷ்மீர் பண்டிட்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள்' என்று கூறியிருக்கிறார்.

Published:Updated:
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

1990-களில் நடந்த காஷ்மீர் இந்து பண்டிட்களின் வெளியேற்றம் மற்றும் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்.’ இப்படம் கடந்த மார்ச் 11-ல் வெளியானது முதல் சமூக வலைதளங்கள் தொடங்கி சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கும் (AAP) பாரதிய ஜனதா கட்சிக்கும் (BJP) இடையே நடந்த வார்த்தைப் போர் தீவிரமடைந்துவருகிறது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, " ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து பா.ஜ.க கவலைப்படுகிறது, ஆம் ஆத்மி கட்சி காஷ்மீர் பண்டிட்கள் குறித்துக் கவலைப்படுகிறது’ என்று கூறினார். மேலும், காஷ்மீர் பண்டிட்கள் 25 வருடங்களாக டெல்லியில் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு பா.ஜ.க தலைவர்கள் ஏதும் செய்யவில்லை, அவர்களை நேரில் சந்தித்துக்கூடப் பேசவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி காஷ்மீர் பண்டிட் ஆசிரியர்களுக்கு 233 நிரந்தரப் பணியிடங்களை வழங்கியுள்ளது." என்று கூறினார்.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’
‘தி காஷ்மீர் பைல்ஸ்’

மேலும் அவர், ’மத்தியில் 8 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க காஷ்மீர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், காஷ்மீர் மக்களை வைத்து 32 வருடங்களாக அரசியல் செய்கிறது. தற்போது 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தை விளம்பரப்படுத்தி அரசியல் செய்கிறது’ என்று குற்றம் சாட்டினார். மேலும் 'இத்திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் காஷ்மீர் பண்டிட் மக்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள்' என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism