Published:Updated:

நடிகை உர்ஃபி ஜாவேத் அணிந்து வந்த இரட்டை பேன்ட்; வைரல் வீடியோவுக்கு குவிந்த கமென்ட்கள்!

இரட்டை பேன்ட்டுடன் உர்ஃபி ஜாவேத்

நடிகை உர்ஃபி ஜாவேத் தனது வித்தியாசமான ஆடை வடிவமைப்புகளுக்காகப் பிரபலமானவர்.

நடிகை உர்ஃபி ஜாவேத் அணிந்து வந்த இரட்டை பேன்ட்; வைரல் வீடியோவுக்கு குவிந்த கமென்ட்கள்!

நடிகை உர்ஃபி ஜாவேத் தனது வித்தியாசமான ஆடை வடிவமைப்புகளுக்காகப் பிரபலமானவர்.

Published:Updated:
இரட்டை பேன்ட்டுடன் உர்ஃபி ஜாவேத்

டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் எப்போதும் ஆடை விஷயத்தில் எதையாவது புதுமையாக செய்துகொண்டே இருப்பார். புதிய புதிய பேஷனில் ஆடைகள் அணிவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அவற்றை சமூக வலைதளத்தில் பதிவிடுவதும் வழக்கமாகும். அவரது புதிய பேஷன் ஆடைகளை போட்டோ எடுப்பதற்கென்றே புகைப்படக்காரர்கள் பலரும் விரும்பி புகைப்படம் எடுப்பர். இப்போது ஜாவேத் புதிய ஆடை ஒன்றை அணிந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கமாக நாம் ஒரு பேன்ட் மட்டும்தான் அணிவது வழக்கம். ஆனால் உர்ஃபி ஜாவேத் ஒரே கலரில் இரண்டு பேன்ட் அணிந்து வெளியில் வந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தார். அதாவது ஒரு பேன்ட்டை அணிந்து கொண்டார்.

சேலையில் ஸ்கிப்பிங்
சேலையில் ஸ்கிப்பிங்

மற்றொரு பேன்ட்டை ஏற்கெனவே அணிந்திருக்கும் பேன்ட்மீது பின் மூலம் குத்தி ஒட்ட வைத்திருந்தார் பேக்லெஸ் அதாவது பின்புறம் எதுவும் இல்லாமல் முன் பகுதியை மட்டும் மறைக்கும் விதமான ஒரு பச்சை கலர் மேலாடை அணிந்திருந்தார். இந்த ஆடைகளை அணிந்து கொண்டு வெளியில் தன்னை போட்டோ எடுப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்த புகைப்படக்காரர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார். அதை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதனைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்து தங்களது கருத்துகளை பதிவிட்டு இருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருவர் 'இது என்ன பேஷன்' என்று கேள்வி எழுப்பி இருந்தார். மற்றொருவர் 'ஒன்று எடுத்தால் ஒன்று இலவசமா' என்று கேட்டுள்ளார். மற்றொருவர் உங்களுக்கு எந்த அளவு பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் தீர்மானிக்க முடியாதபோது இரண்டையும் ஏன் எடுக்ககூடாது என்று தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை மற்றொரு வீடியோவையும் ஜாவேத் வெளியிட்டிருந்தார். அதில் சேலை கட்டிக்கொண்டு, ஹீல்ஸ் அணிந்து கொண்டு ஸ்கிப்பிங் விளையாடுவது போன்று அந்த வீடியோ இருந்தது. உர்ஃபி ஜாவேத் கடைசியாக பிக் பாஸ் ஒடிடி தளத்தில் தலைகாட்டினார். அதோடு மியூசிக் ஆல்பத்திலும் நடித்துள்ளதோடு, சோனி டிவி உட்பட பலர் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். அவரது வித்தியாசமான ஆடைக்காக பாராட்டுகள் மட்டுமல்லாது விமர்சனங்களையும் பெற்று வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism