Published:Updated:

‘டிரக் மாஃபியா’... என்ன நடக்கிறது பாலிவுட்டில்?

ரியா சக்ரபோர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
ரியா சக்ரபோர்த்தி

பாந்தராவின் பங்களா வீடுகளில் ஒன்று தற்போது பாலிவுட்டின் தலை யெழுத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது. அங்கு நிகழ்ந்த ஓர் இளம் நடிகரின் மரணம்,

‘டிரக் மாஃபியா’... என்ன நடக்கிறது பாலிவுட்டில்?

பாந்தராவின் பங்களா வீடுகளில் ஒன்று தற்போது பாலிவுட்டின் தலை யெழுத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது. அங்கு நிகழ்ந்த ஓர் இளம் நடிகரின் மரணம்,

Published:Updated:
ரியா சக்ரபோர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
ரியா சக்ரபோர்த்தி
பாந்தராவின் பங்களா வீடுகளில் ஒன்று தற்போது பாலிவுட்டின் தலை யெழுத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது. அங்கு நிகழ்ந்த ஓர் இளம் நடிகரின் மரணம், அது தொடர்பான வழக்கு, தற்போது பல பரிமாணங்களை எடுத்து பாலிவுட்டின் போதைப் பொருள் மாஃபியாவில் மையம் கொண்டிருக்கிறது. சுஷாந்த்தின் பணத்தைக் கையாடல் செய்தார் என்று ரியா சக்ரபோர்த்தியைச் சூழ்ந்த வலை, பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான தீபிகா படுகோன் தொடங்கி ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் வரை படரத் தொடங்கியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்னதான் பிரச்னை?

சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டபின், அவரின் உறவினர்கள் பீகார் காவல் துறையில் ரியா சக்ரபோர்த்தியின் மீது புகார் கொடுத்தனர். சுஷாந்த்தின் பணத்தைக் கையாடல் செய்து அவரைக் கட்டுக்குள் வைத்திருந்ததாக ரியாவின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், ரியாவின் செல்போனில் போதைப் பொருள் தொடர்பான உரையாடல்கள் இருப்பது தெரியவர, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தாமாகவே முன்வந்து புதிய வழக்கைப் பதிவு செய்தது. சுஷாந்த்் தற்கொலை தொடர்பாக ரியா தவிர இதுவரை வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இந்த போதைப் பொருள் வழக்கு தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டி ருக்கின்றனர்.

தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங்
தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங்

ரியா மற்றும் சுஷாந்த்தின் மேலாளரான ஜெய சாஹாவின் வாட்ஸப் உரை யாடல்களை வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஜெய சாஹாவின் மொபைலில் இருந்த ஒரு வாட்ஸப் குரூப்பில் தீபிகா படுகோன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் பெயர்களும் இருக்கவே, கவனம் பாலிவுட் பக்கம் திரும்பியது. கூடவே நடிகைகள் சாரா அலிகான், ஷ்ரதா கபூர் ஆகிய இரு வருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த இருவரின் பெயர்களை ரியாதான் சொன்னார் என ஒரு தரப்பு கூறினாலும் ரியாவின் வக்கீல் இதை மறுத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரதா கபூர் ஆகியோரை விசாரித்திருக்கிறது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு. இந்த விசாரணையில் தீபிகா மூன்று முறை உடைந்து அழுததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

என்ன வகை போதைப் பொருள்?

விசாரணைக்கு அடிப் படையான அந்த வாட்ஸப் உரையாடல், 2017-ல் தீபிகாவுக்கும் அவரின் மேலாளருக்கும் இடையே நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளாகப் பார்க்கப்படுபவை இரண்டு - ‘மால்’ மற்றும் ‘ஹேஷ்.’ ‘மால்’ என்பதன் அர்த்தம் ‘சரக்கு.’ பொதுவாக சர்ச்சைக்குரிய பொருள்களின் பெயரை வெளிப்படையாகச் சொல்லாமல் இப்படிச்் சொல்்வார்கள். ‘ஹேஷ்’ என்பது கஞ்சாவின் பிசின் வடிவம். வழக்கமாக புழக்கத்தில் இருக்கும் ‘மரிஜுவானா’வை (கஞ்சா இலைகள்) விடவும் வீரியம் மிக்கது.

‘டிரக் மாஃபியா’... என்ன நடக்கிறது பாலிவுட்டில்?

ஆதாரங்கள் போதுமானவையா?

பொதுவாக குற்றத்தை நிரூபிக்க இரண்டு வகையான ஆதாரங்கள் சமர்்ப்பிக்்கப்படுவதுண்டு. முதன்மை ஆதாரம், கையில் ஹார்டு காப்பியாக, அதாவது ஆவணங்களாக இருப்பவை. இதை முன்னுரிமை கொடுத்து நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். முதன்மை ஆவணங்களோடு தொடர்புடைய, அவற்றுக்குக் கூடுதல்் வலுச்சேர்ப்பவை இரண்டாம்தர ஆவணங்கள். முதன்மை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் இரண்டாம்தர ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இந்த ஆவணங்கள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் வடிவிலானதாக இருக்கும். உதாரணத்துக்கு மெயில் ஸ்க்ரீன்ஷாட், வாட்ஸப் ஸ்க்ரீன்ஷாட் போன்றவை.

இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் (Indian Evidence Act) செக்‌ஷன் 65(B)(2) படி, சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் பிரதிகள் அசலானவை அல்லது அசலின் துல்லியமான பிரதி என்பதை உறுதி செய்யவேண்டும். காரணம், எந்த வகையிலும் அவற்றில் மோசடி நடந்திருக்கலாம். உதாரணமாக, ஒரு சர்ச்சைக்குரிய உரையாடல், குற்றம்சாட்டப்பட்டவரின் மொபைலில் இருந்தே சென்றிருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அந்த மொபைலை அவர்தான் பயன்படுத்தினாரா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதுவும், சம்பந்தப்பட்டவரே நான்தான் பயன்படுத்தினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவேண்டும். அப்போதுதான் அந்த ஆதாரம் வலுப்பெறும். இந்த ஒப்புதல் வாக்குமூலம்தான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் இப்போதைய எதிர்பார்ப்பு. அது இருந்தால்தான் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியும்.

சாரா அலிகான் ஷ்ரதா கபூர்-
சாரா அலிகான் ஷ்ரதா கபூர்-

பாலிவுட்டில் டிரக் மாஃபியா?

இரண்டு மூன்று வாட்ஸப் ஸ்க்ரீன்ஷாட்கள், மெசேஜ் பரிமாற்றங்களை மட்டுமே வைத்துகொண்டு, ‘பாலிவுட்டில் டிரக் மாஃபியா இருக்கிறது. அதை வளைத்துப் பிடிக்கப்போகிறோம்’ என்று அதிகாரிகள் சொல்வதுதான் வேடிக்்கை. உண்மையில், கஞ்சா என்பது இந்தியா முழுக்கவே மிகச் சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் போதைப்பொருள். உச்ச நட்சத்திரங்களுக்கு அதை வாங்குவதெல்லாம் பெரிய விஷயமேயில்லை. போதைப்பொருள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். அதில் எவருக்கும்் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், இத்தகைய வாட்ஸப் ஸ்க்ரீன்ஷாட்களை மட்டுமே வைத்து மிகப்பெரிய ட்ரக் மாஃபியா நெட்வொர்க் இயங்குவதாகச் சொல்லமுடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

சுஷாந்த் தற்கொலை விவகாரத்தைப் பெரிதாக்கி பலர் கல்லா கட்டுவதாக வெளிப்படையாகவே குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. குறிப்பாக கங்கனா ரணாவத் இந்தச் சர்ச்சைகளை வைத்து தன் ஸ்டார் வேல்யூவை உயர்த்திக்கொள்வதாக டாப்ஸி, அனுராக் காஷ்யப் தொடங்கி பல உச்ச நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சில சித்தாந்தங் களின் பின்னால் கங்கனா ஒளிந்து கொண்டு இதை மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையாக மாற்றுவதாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

மற்றொரு தரப்பினர், ‘நாடு முழுவதும் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் செய்ய அரசே நடத்தும் நாடகம்தான் இந்த பாலிவுட் டிரக் மாஃபியா’ எனக் குற்றம் சாட்டுகின்றனர். அரசுக்கு போதைப்பொருள்களைத் தடுப்பதில் நிஜமாகவே அக்கறை இருந்தால் வட இந்தியாவின் பல புனித ஸ்தலங்களில் புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவை ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

ரியா சக்ரபோர்த்தி
ரியா சக்ரபோர்த்தி

கடந்த வாரம் பிரபல ஆங்கில இணையதளம் ஒன்றில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைக்கு தீபிகா படுகோனை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை செய்யும் காட்சிகள் லீக்காகியுள்ளதாக தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால், ‘கட்டுரையை க்ளிக் செய்து வந்ததற்கு நன்றி. தற்போது நாட்டின் மிக முக்கியமான பிரச்னை ஒன்றை இங்கே பார்க்கப்போகிறோம். ஆனால், அது தீபிகா தொடர்பானது அல்ல. விவசாயிகளின் பிரச்னையைப் பற்றியது’ என்று கூறி அது தொடர்பான கட்டுரை பார்வைக்கு விரிந்தது.

தேசத்தின் தற்போதைய அவலச் சூழலை இதைவிட எளிமையாக யாராலும் விளக்கமுடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism