Published:Updated:

ஷாருக் கானை டாம் குரூஸுடன் ஒப்பிட்ட அமெரிக்கப் பத்திரிக்கையாளர்; கோபமடைந்த ரசிகர்கள்!

ஷாருக் கான், டாம் குரூஸ்

ஷாருக் கானை ‘இந்தியாவின் டாம் குரூஸ்’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த அமெரிக்கப் பத்திரிகையாளருக்கு ஷாருக் கான் ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Published:Updated:

ஷாருக் கானை டாம் குரூஸுடன் ஒப்பிட்ட அமெரிக்கப் பத்திரிக்கையாளர்; கோபமடைந்த ரசிகர்கள்!

ஷாருக் கானை ‘இந்தியாவின் டாம் குரூஸ்’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த அமெரிக்கப் பத்திரிகையாளருக்கு ஷாருக் கான் ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஷாருக் கான், டாம் குரூஸ்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான 'பதான்' படத்தில் இடம்பெற்ற 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆரஞ்சு நிற பிகினி உடை சர்ச்சையைக் கிளப்பி பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தது. ஆனால் தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனையும் படைத்து வருகிறது. குறிப்பாக நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷாருக் கான் நடிப்பில் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் அதிக அளவில் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஷாருக் கான்
ஷாருக் கான்

'பாய்காட்' கலாசாரத்தால் துவண்டுப் போயிருந்த பாலிவுட் திரையுலகிற்கு 'பதான்' படத்தின் மூலம் நம்பிக்கை கொடுத்துள்ளார் ஷாருக் கான். இதனால் பலரும் அவருக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் ஷாருக் கான் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அப்பதிவில், “இந்தியாவின் டாம் குரூஸ் ஷாருக் கான், தனது பிளாக்பஸ்டர் படம் 'பதான்' மூலம் பாலிவுட்டைக் காப்பாற்றியிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tom Cruise
Tom Cruise

அவரின் இப்பதிவைக் கண்டு கோபமடைந்த ஷாருக் கானின் ரசிகர்கள், "அது எப்படி ஷாருக் கானை டாம் குரூஸுடன் ஒப்பிடுவீர்கள்? ஷாருக் கான் போல வேறு யாரும் இல்லை. நடை, உடை, மனோபாவம், காதல், ஆக்ஷன் போன்ற பல பரிணாமங்கள் கொண்ட மனிதர் SRK. அவரை யாரும் இதுவரை நெருங்கவில்லை. அதனால் அவரை யாருடனும் ஒப்பிடாதீர்கள். ஷாருக் கான் இந்தியாவின் டாம் குரூஸ் அல்ல, அவர் ஒரு தேசிய பொக்கிஷம். அவர் தனது திரைப்படங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்" என்று  கடுமையாகத் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.