பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மாடல் அழகி ரியா பிள்ளை என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நியைலில், ரியாபிள்ளை லியாண்டர் பயஸ்மீது குடும்ப வன்முறைச்சட்டத்தின் கீழ் மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதோடு இதில் இரண்டு பேரும் முறைப்படி பிரியவும் கோர்ட் ஒப்புதல் வழங்கியது. தற்போது லியாண்டர் பயஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடிகை கிம் சர்மா என்பவரைக் காதலித்து வருகிறார். இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவாவிற்கு விடுமுறையை கழிக்கச் சென்றனர். அவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதாக முறைப்படி அறிவித்துள்ளனர்.

கிம் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் ஒரு ஆண்டாக ஒன்றாக இருப்பதை ஹேப்பி அனிவர்சரி 365 சார்லஸ் என்றும், எல்லையில்லா மகிழ்ச்சியான நினைவுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது காதலன் லியாண்டர் பயஸை சார்லஸ் என்றும் கிம்சர்மாவை மிச் என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். அதோடு கிம் சர்மாவின் பிறந்தநாளையொட்டி இருவரும் பஹாமாவிற்கு சுற்றுலா சென்று அங்குள்ள கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். முதலாம் ஆண்டை கொண்டாடும் இருவருக்கும் பாலிவுட் பிரபலங்கள் மலைகா அரோரா உட்பல பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடைசியாக கிம் சர்மா 2006-ம் ஆண்டு சுஷ்மிதா சென்னுடன் இணைந்து ஜிந்தகி ராக்ஸ் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போதுவரை வேறெந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.