Published:Updated:

``ஷாருக் கான் எப்போதும் நூலகத்தில்தான் இருப்பார்..." கௌரி கான் நெகிழ்ச்சி!

தன் குடும்பத்தினருடன் ஷாருக் கான்

நேர்காணல் ஒன்றில் பேசிய ஷாருக்கானின் மனைவி கௌரி கான், ஷாருக் கானின் நூலக அறை குறித்தும் ஆர்யன் கானின் பொழுதுபோக்கு அறையை வடிவமைத்தது குறித்தும் சுவாரஸ்மானத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

Published:Updated:

``ஷாருக் கான் எப்போதும் நூலகத்தில்தான் இருப்பார்..." கௌரி கான் நெகிழ்ச்சி!

நேர்காணல் ஒன்றில் பேசிய ஷாருக்கானின் மனைவி கௌரி கான், ஷாருக் கானின் நூலக அறை குறித்தும் ஆர்யன் கானின் பொழுதுபோக்கு அறையை வடிவமைத்தது குறித்தும் சுவாரஸ்மானத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

தன் குடும்பத்தினருடன் ஷாருக் கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஷாருக் கான். இவரது பிரமாண்ட பங்களாவான `Mannat' மும்பையின் பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது.

வெளிப்புறத்திலிருந்து பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் இந்த பங்களாவின் உட்புறம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும், என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன, அதன் உருவாக்கம் எப்படிப்பட்டது என்பதை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் `My Life in Design’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகம் கடந்த ஞாயிற்றுகிழமை வெளியிடப்பட்டது.

Mannat
Mannat

இப்புத்தகத்தின் முன்னுரையில் ஷாருக் கான், ``தன் புத்தகத்தில் என்னென்ன சேர்த்திருக்கிறாள் என்பதைப் பார்க்க நான் ஆவலாகக் காத்திருக்கிறேன். என் அறையைவிட வேறு இடங்களை அவர் சிறப்பாக வடிவமைத்திருந்தால், என் இடத்தை இன்னும் சிறப்பாக வடிவமைக்கக் கட்டாயப்படுத்துவேன்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் ஷாருக் கானின் அறையும், அவரது வீடும் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கக் காத்திருகின்றனர். மேலும் அப்புத்தகத்தில் இடம்பெற்ற ஷாருக்கான் குடும்பத்தின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஷாருக் கானின் மனைவி கௌரி கான் இப்புத்தகம் குறித்தும் ஷாருக் கானின் நூலக அறை குறித்தும் பேசியிருந்தார்.

ஷாருக்கான் குடும்பம்
ஷாருக்கான் குடும்பம்

இதுபற்றி பேசியுள்ள அவர், ``படப்பிடிப்பில் இல்லாதபோது ஷாருக் கான் பெரும்பாலும் வீட்டில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள நூலகத்தில்தான் இருப்பார். அது பல்வேறு வசதிகள் அடங்கிய நூலகம். பள்ளியின் நினைவுகளும், சூழலும் நிறைந்திருக்கும் விதமாகப் பிரத்யேகமாக அதை வடிவமைத்தோம்" என்று கூறினார். மேலும், தன் மகன் ஆர்யன் கான் அறை பற்றி பகிர்ந்துகொண்ட கௌரி கான், ``ஆர்யன் கான் நண்பர்களுடன் இருக்க பிரத்யேகமான அறை ஒன்றை வடிவமைத்தோம். அங்கு தன் நண்பர்களுடன் அவரின் நேரத்தைச் செலவிடுவார். திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், கேம் விளையாடுவதற்கும், படிப்பதற்கும் அங்கு ஏராளமான வசதிகள் செய்து கொடுத்தோம்" என்றார்.