Published:Updated:

Cannes 2023: கேன்ஸ் திரைப்படவிழாவில் பிக்பாஸ் நடிகை!- ஆச்சரியத்தில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

பிக் பாஸ் நடிகை

அவ்விழாவில் அவர் பிங்க் நிற ஆடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின

Published:Updated:

Cannes 2023: கேன்ஸ் திரைப்படவிழாவில் பிக்பாஸ் நடிகை!- ஆச்சரியத்தில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

அவ்விழாவில் அவர் பிங்க் நிற ஆடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின

பிக் பாஸ் நடிகை
உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 17 ஆம் தேதி தொடங்கி ஆரவாரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா சார்பில் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  நடிகர் மாதவன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சாரா அலி கான், மனுஷி சில்லார், ஈஷா குப்தா உள்ளிட்ட கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களும்  இதில் கலந்து கொண்டுள்ளனர்.

சப்னா சௌத்ரி
சப்னா சௌத்ரி

இந்நிலையில் ஹரியான்வி நடனக் கலைஞரும், இந்தி ‘பிக் பாஸ் 10'- ல் கலந்துகொண்டு புகழ்பெற்றவருமான  ‘சப்னா சௌத்ரி’  இந்த 76 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். அவ்விழாவில் அவர்  பிங்க் நிற ஆடை அணிந்து  சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகின. இதனை பார்த்த நெட்டிசன்கள் திரைப்பட பிரபலங்கள்  கலந்துகொள்ளும் இவ்விழாவில் ‘பிக் பாஸ் 10’ ல்  பங்கேற்ற சப்னா சௌத்ரி’ கலந்துகொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஹரியான்வி தொழில்துறைக்கு கிடைத்த  மிகப்பெரிய வெற்றி என்று  சமூகவலைதளங்களில் கருத்துக்களைப்  பதிவிட்டு தங்களது வாழ்த்துக்களை சப்னா சௌத்ரிக்கு நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.           

இதனிடையே  சிவப்பு கம்பளத்தில்  நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப்  சப்னா சௌத்ரி இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்து பதிவு  ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “ கனவுகள் நிச்சயம் ஒரு நாள் நனவாகும். இது என்னுடைய தியாகம் மற்றும் உறுதிப்பாடுகள் நிறைந்த நீண்ட பயணம். இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி. @airfrance உடன் இணைந்து சிவப்பு கம்பளத்தில் நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.