Published:Updated:

ப்ரீத்தி ஜிந்தா: வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள்; சரியான நேரத்தில் உதவிய ஹ்ரித்திக் ரோஷன்!

ஹ்ரித்திக் ரோஷனுடன் ப்ரீத்தி ஜிந்தா

ஹ்ரித்திக் ரோஷனின் பிறந்த நாளையொட்டி பிரீத்தி ஜிந்தா மிகவும் உணர்ச்சிபூர்வவாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஹ்ரித்திக் ரோஷனும், பிரீத்தி ஜிந்தாவும் சேர்ந்து மில்கயா உட்பட 3 படங்களில் நடித்திருக்கின்றனர்.

ப்ரீத்தி ஜிந்தா: வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள்; சரியான நேரத்தில் உதவிய ஹ்ரித்திக் ரோஷன்!

ஹ்ரித்திக் ரோஷனின் பிறந்த நாளையொட்டி பிரீத்தி ஜிந்தா மிகவும் உணர்ச்சிபூர்வவாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஹ்ரித்திக் ரோஷனும், பிரீத்தி ஜிந்தாவும் சேர்ந்து மில்கயா உட்பட 3 படங்களில் நடித்திருக்கின்றனர்.

Published:Updated:
ஹ்ரித்திக் ரோஷனுடன் ப்ரீத்தி ஜிந்தா

நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் ஐபிஎல் அணி வீரர்கள் ஏலத்தில் பிரீத்தி ஜிந்தாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் இருந்து இரட்டை குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்தியா வந்துள்ளார். அமெரிக்காவில் இருந்து ப்ரீத்தி ஜிந்தா விமானத்தில் இந்தியா வந்தபோது அவருடன் அவரது சகோதரர் தீபன்கரும் உடன் வந்தார். விமானத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் போது அதிக நேரம் பயணம் செய்யவேண்டியிருந்தது. இந்த விமான பயனத்தில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும் வந்தார். பிரீத்தி ஜிந்தாவுக்கு குழந்தைகள் இரண்டையும் வைத்து சமாளிப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

பிரீத்தி ஜிந்தா- ஹ்ரித்திக் ரோஷன்
பிரீத்தி ஜிந்தா- ஹ்ரித்திக் ரோஷன்

உடனே ஹ்ரித்திக்ரோஷன் தலையிட்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ள உதவினார். இதற்காக பிரீத்தி ஜிந்தா சமூக வலைதளத்தில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்து தகவல் பதிவிட்டுள்ளார். அதில் ஹ்ரித்திக்ரோஷன் குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் அற்புதமான தந்தை என்பதை நிரூபித்தார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதோடு அவருடன் எடுத்துக்கொண்ட செல்பி படம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார். உங்களது வாழ்க்கையில் பலர் வருவார்கள், போவார்கள். ஆனால் உண்மையான நண்பர்கள் தான் உங்களது இதயத்தில் நிலைத்து நிற்பார்கள். எனது குழந்தைகளை நீண்ட தூர விமான பயனத்தில் கவனித்துக்கொண்டதற்காக ஹ்ரித்திக் ரோஷனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷனின் பிறந்த நாளையொட்டி பிரீத்தி ஜிந்தா மிகவும் உணர்ச்சிபூர்வவாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஹ்ரித்திக் ரோஷனும், பிரீத்தி ஜிந்தாவும் சேர்ந்து மில்கயா உட்பட 3 படங்களில் நடித்திருக்கின்றனர்.