Published:Updated:

பிரிட்டிஷ் நடிகை லுக்கில் சபா ஆசாத்; ஹிர்த்திக் ரோஷன் பதிவிட்ட வைரல் கமென்ட்!

சபா ஆசாத்

பிரிட்டிஷ் நடிகை லுக்கில் எடுக்கப்பட்ட சபா ஆசாத்தின் புகைப்படம் ஒன்றிற்கு ஹிர்த்திக் பதிவிட்டுள்ள கமென்ட் இப்போது வைரல்.

பிரிட்டிஷ் நடிகை லுக்கில் சபா ஆசாத்; ஹிர்த்திக் ரோஷன் பதிவிட்ட வைரல் கமென்ட்!

பிரிட்டிஷ் நடிகை லுக்கில் எடுக்கப்பட்ட சபா ஆசாத்தின் புகைப்படம் ஒன்றிற்கு ஹிர்த்திக் பதிவிட்டுள்ள கமென்ட் இப்போது வைரல்.

Published:Updated:
சபா ஆசாத்

பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன், பாடகி மற்றும் நடிகையுமான சபா ஆசாத் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. தற்போது சபாவின் புகைப்படம் ஒன்றிற்கு ஹிர்த்திக் பதிவிட்டுள்ள கமென்ட் வைரலாகி வருகிறது.

சபா ஆசாத் 20-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் (Audrey Hepburn) லுக்கில் கருப்பு நிறத்தில் வெள்ளை கட்டமிடப்பட்ட காஸ்டியூமில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 'நீங்கள் என்னை மிஸ்.ஹெப்பர்ன் ஆசாத் என ழைக்கலாம்' என்று அதற்கு கேப்ஷன் வைத்திருந்தார். சபாவின் புகைப்படத்திற்கு விருப்பக்குறி இட்ட ஹிர்த்திக், அதற்கு 'கால வரையறைக்கு அப்பாற்பட்டது (Timeless)' எனப் புகழ்ந்து ஸ்மைலி எமோஜியோடு கமென்டும் செய்துள்ளார்.

ஹிர்த்திக் ரோஷன் கமென்ட்
ஹிர்த்திக் ரோஷன் கமென்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹிர்த்திக்கின் முன்னாள் மனைவி சுசானா கானும் இந்தப் பதிவிற்கு ஹார்ட் விட்டுள்ளார். ஹிர்த்திக்கைச் சபாவின் பதிவுகளில் அடிக்கடி கமென்ட் செக்ஷனில் பார்க்க முடிகிறது. இருவரும் ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வரும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. சபா ஆசாத் ஹிர்த்திக் குடும்பத்தோடு ஞாயிறு மதிய உணவுகளில் கலந்து கொள்கிறார். "இருவருக்கும் இந்த உறவை முன்னெடுத்து செல்ல விரும்புகிறார்கள். இன்னும் தீர்மானமாகவில்லை தவிர இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுவதால் சந்தோசமாக இருக்கின்றனர். இன்னும் நெருக்கமாக புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவும்" என இருவரையும் தெரிந்தவர்கள் சொல்கின்றனர்.