ஹிர்த்திக் ரோஷன் டேட் செய்வதாக சர்ச்சைக்குள்ளான நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இப்போது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளின் படத்தை சபா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். அதில் ஹிர்த்திக்கின் அத்தை கஞ்சன் ரோஷன், சகோதரி பாஷ்மினா ரோஷன், சகோதரி மகள் சுரனிகா ஆகியோரை டேக் செய்து நன்றி தெரிவித்துள்ளார். "நீங்கள் வீட்டை மிஸ்செய்யும் போது, சிறந்த மனிதர்கள் எப்போதும் உங்களுக்கு உணவளிப்பார்கள்" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

ஹிர்த்திக்கும் சபாவும் இதுவரை தாங்கள் டேட்டில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தவில்லை. இவர்கள் இரவு டின்னர் முடித்து வெளியே வருவது போலான புகைப்படம் சமீபத்தில் வைரலானது. ஹிர்த்திக் முன்னாள் மனைவி சபாவின் நிகழ்ச்சிக்கு சென்றதும் நடந்தது. கடந்த மாதம் சபா ஹிர்த்திக் குடும்பத்துடன் மதிய உணவுக்கு கலந்து கொண்டார். ஹிர்த்திக்கின் மாமா ராஜேஷ் ரோஷன் "மகிழ்ச்சி எப்போதும் நம்மை சுற்றி இருக்கும், குறிப்பாக ஞாயிறு மதிய உணவு நேரங்களில்" எனப் பதிவிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
