இந்தியா உலகக் கோப்பையை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சர்ச்சையைக் கிளப்பியவர் நடிகை பூனம் பாண்டே. அதன் பிறகு அவர் பெயரிலான ஆப், கணவருடனான மோதல், பாலியல் வீடியோக்களுக்காக கைது என பாலிவுட் உலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் . இப்போது மீண்டும் அவர் பெயர் அடிபடக் காரணம், கங்கனா ரனாவத் ஹோஸ்ட் செய்யும் `லாக் அப்' நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார் பூனம். வித்தியாசமான நிகழ்ச்சி என்கிற பெயரில் தொடங்கப்பட்டிருக்கிற லாக் அப் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் எல்லோரும் சர்ச்சை பின்னனி கொண்டவர்களே. சக போட்டியாளர்களுக்கான அஞ்சலி அரோரா மற்றும் தேசீன் பூனவலா ஆகியோரிடம் பூனம் தனது வீடியோக்கள் ட்ரோல் செய்யப்படுவதைப் பற்றி பகிர்ந்து கொண்டார். "60 மில்லியன் இம்ப்ரசன்கள், 200 மில்லியன் பார்வைகள் ஒரு மாதத்தில். யார் தான் இந்த ரகசியமாகப் பின்தொடர்பவர்கள். இரவுகளில் இவர்கள் என் வீடியோக்களைப் பார்க்கிறார்கள். பகலில் எழுந்ததும் எனக்கு எதிராக ட்ரோல் செய்யவும் கமென்ட் செய்யவும் ஆரம்பித்து விடுகிறார்கள். யார் வெக்கமில்லாதவர்கள் என எனக்குத் தெரிந்தாக வேண்டும். நானா, அவர்களா..." மேலும், " சிறிய ஆடைகள் அணிவது, என்னுடைய உடலைக் காட்டுவது, இதனால் என்னை வெட்கம் இல்லாதவள் என நீங்கள் சொன்னால் நான் ஏற்று கொள்ளப்போவதில்லை. மற்றவர்களைச் சீண்டுபவர்கள், மோசமாக உணரச் செய்பவர்களே என்னைப் பொறுத்தவரை வெட்கம் இல்லாதவர்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிகழ்ச்சியில் பூனம் தன்னுடைய பர்சனல் ஆன விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அவருடைய முன்னாள் கணவரான சாம் பாம்பே குறித்து, 'காலையில் ஆரம்பித்து இரவு வரை குடித்து விட்டு தன்னைத் தாக்கியதாகச்' சொல்லியிருந்தார். அதற்கு பதில் அளித்த சாம் பாம்பே, "பூனமிடம் எல்லா பண்புகளுமே இருக்கிறது, விசுவாசத்தைத் தவிர. நம்பிக்கையும் நேர்மையும் இல்லை. அது ஒரு தோல்வியானது. அவர் உருவாகியிருக்கிற பிம்பத்தினால் யாருமே அவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என என்னிடம் அவர் சொன்னதால் தான் நான் திருமணம் செய்துக்கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் என்னைப் பற்றி பேச வேண்டிய காரணம் என்ன. நாங்கள் இருவரும் உண்மையாக காதலித்தோம்" என்று தெரிவித்திருக்கிறார்.