Published:Updated:

"என் 300 படங்களை உன் முதல் படத்துடன் ஒப்பிட்டுப் பேசுவாங்க!"- ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்த ஜான்வி கபூர்

ஸ்ரீதேவி, ஜான்வி கபூர்

அம்மா சொன்னதை நான் அப்போது கேட்கவில்லை என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

"என் 300 படங்களை உன் முதல் படத்துடன் ஒப்பிட்டுப் பேசுவாங்க!"- ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்த ஜான்வி கபூர்

அம்மா சொன்னதை நான் அப்போது கேட்கவில்லை என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஸ்ரீதேவி, ஜான்வி கபூர்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் 2018-ல் 'தடக்' படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவரது முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஸ்ரீதேவி இறந்துவிட்டார். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தன் மகள்கள் நடிகையாவதை விட அவர்கள் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதையே விரும்பியுள்ளார். ஆனால் ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி, குஷி ஆகிய இருவருமே பாலிவுட்டில் தற்போது நடித்து வருகின்றனர். இந்நிலையில் தனது அம்மா கூறியதை ஜான்வி கபூர் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். ஜான்வி கபூரை பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹர் பேட்டி எடுத்துள்ளார்.

ஸ்ரீதேவி, ஜான்வி கபூர்
ஸ்ரீதேவி, ஜான்வி கபூர்

அதில் அவரது அம்மா ஸ்ரீதேவி பற்றி ஜான்வி கபூர் கூறுகையில், "நான் நடிகையாக விரும்புகிறேன் என்று அம்மாவிடம் கூறியப் போது வேண்டாம் என்றார். 'நடிப்பு என்பது அவ்வளவு சுலபமானது இல்லை. அப்படி இருக்கும்போது நீ ஏன் நடிகையாக விரும்புகிறாய். என் 300 படங்களை உன் முதல் படத்துடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இதை எல்லாம் எப்படிச் சமாளிப்பாய்?' என்று என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் அப்போது அம்மா கூறிய எதையும் கேட்கவில்லை. நான் நடிகையாக வேண்டும் என்று ஆசைபட்டதால் நடிக்க வந்துவிட்டேன்" என்று அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனது முதல் படமான 'தடக்' படத்தின் சில காட்சிகளைப் பார்த்து விட்டு மேக்கப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தனது அம்மா கூறியதையும் ஜான்வி கபூர் நினைவு கூர்ந்துள்ளார்.