Published:Updated:

Jawan: ஷாருக்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதி, கெஸ்ட் ரோலில் விஜய் - இது அட்லீயின் மாஸ்டர் பிளான்!

ஷாருக்கான்

'ஜவான்' படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியைக் கேட்க, அவரும் உடனே சம்மதித்திருக்கிறார். ஷாருக்கான் - விஜய் சேதுபதி காம்போ வரும் காட்சிகளில் அதிரடி ஆக்‌ஷன் தெறிக்கும் என்கிறார்கள்.

Jawan: ஷாருக்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதி, கெஸ்ட் ரோலில் விஜய் - இது அட்லீயின் மாஸ்டர் பிளான்!

'ஜவான்' படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியைக் கேட்க, அவரும் உடனே சம்மதித்திருக்கிறார். ஷாருக்கான் - விஜய் சேதுபதி காம்போ வரும் காட்சிகளில் அதிரடி ஆக்‌ஷன் தெறிக்கும் என்கிறார்கள்.

Published:Updated:
ஷாருக்கான்
அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகிவரும் `ஜவான்' பேன் இந்தியா படமாகத் தயாராகி வருகிறது. சென்னையில் நடந்து வந்த அதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்திருக்கிறது.

விஜய்யின் 'பிகில்' படத்திற்குப் பின் இந்திக்குச் சென்றிருக்கிறார் இயக்குநர் அட்லீ. அங்கே அவர் சொன்ன கதை, ஷாருக்கிற்கு ரொம்பவே பிடித்துப்போய்விட, தன்னுடைய ரெட் சில்லீஸ் பேனரில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் இந்தப் படம் ரெடியாகியுள்ளது. இப்படத்தில் ஷாருக், நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு ஆகியோருடன் விஜய் சேதுதிபதியும் இருக்கிறார். அவர் இப்போது இந்தியில் முன்னதாக 'மேர்ரி கிறிஸ்துமஸ்', 'மும்பைக்கர்' என இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்தச் சூழலில் 'ஜவான்' படத்தில் வில்லனாக நடிக்க அவரைக் கேட்கவும், உடனே சம்மதித்திருக்கிறார்.

விஜய், அட்லீ, ஷாருக்கான்
விஜய், அட்லீ, ஷாருக்கான்

ஷாருக்கான் - விஜய் சேதுபதி காம்போ வரும் காட்சிகளில் அதிரடி ஆக்‌ஷன் தெறிக்கும் என்கிறார்கள். சென்னையில் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில்தான் விஜய்யின் 'புலி' உட்படப் பல படங்களின் ஷூட்டிங் நடந்திருக்கிறது. அப்படி ஒரு ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் அமைத்துப் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் அட்லீ. மொத்தம் 20 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருந்த ஷாருக், மீதமுள்ள சில ஷெட்யூலையும் தொடர்ந்து அங்கேயே நடத்திவிடலாம் எனச் சொல்லவும் சென்னையிலேயே 30 நாள்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அடுத்த ஷெட்யூல் மும்பையில் நடக்கவிருக்கிறது. அட்லீ விரும்பிக் கேட்டுக்கொண்டதற்கிணங்க விஜய் இதில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்துக்கொடுத்துள்ளார். இந்தத் தகவலை நாம் முன்பே சொல்லியிருந்தோம். இதன்மூலம் இந்தியில் நேரடியாக அறிமுகமாகிறார் விஜய்.

விஜய்
விஜய்

சென்னையில் படப்பிடிப்பு இருந்த நாள்களில் அட்லீயும், அவர் மனைவி ப்ரியா அட்லீயும் பாசமழை பொழிந்து ஷாருக்கை உபசரித்ததில் நெகிழ்ந்திருக்கிறார் ஷாருக். அட்லீ வீட்டு சிக்கன் 65 அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விட, அதை எப்படிச் செய்ய வேண்டுமென ரெசிபியும் கேட்டுத் தெரிந்திருக்கிறார் ஷாருக். 'ஜவான்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்பையில் நடக்கின்றன. படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.