Published:Updated:

``பாத்ரூம் வருதுன்னு படம் பார்க்கும்போது பாதியில் போனால் கூட..." -ஜான் ஆபிரஹாம் வருத்தம்!

ஜான் ஆபிரஹாம்

`Attack Part 1' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஜான் ஆபிரஹாம் பதிலளித்துள்ளார்.

``பாத்ரூம் வருதுன்னு படம் பார்க்கும்போது பாதியில் போனால் கூட..." -ஜான் ஆபிரஹாம் வருத்தம்!

`Attack Part 1' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஜான் ஆபிரஹாம் பதிலளித்துள்ளார்.

Published:Updated:
ஜான் ஆபிரஹாம்
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் தனது அதிரடியான கருத்துக்களுக்கு பெயர் போனவர். பாலிவுட் Vs தென்னிந்திய மொழி படங்கள் சர்ச்சை வந்த போது, "நான் ஒருபோதும் வட்டார மொழி படங்களில் நடிப்பதாக இல்லை. நான் ஹிந்தி பட ஹீரோ" எனத் தெரிவித்திருந்தார்.

ஜான் ஆபிரஹாமின் `Ek Villain Returns' படம் ஜூலை 29-ல் வெளியாகவிருக்கிறது. இதற்கான ப்ரோமோஷனில் பிஸியாக இருப்பவர் போகிற வழியில் OTT பற்றியும் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இவரின் முந்தைய `Attack Part 1' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் தயாரிப்பாளராக OTT-ஐ விரும்புகிறேன். ஓடிடி-க்கு படங்கள் எடுப்பதையும் பார்வையாளர்களுக்கு அதனைக் கொடுப்பதிலும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் நடிகராக, நான் திரையரங்குகளில்தான் தோன்ற வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன்" என்று நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஜான் ஆபிரஹாம்
ஜான் ஆபிரஹாம்

"நான் பிக் ஸ்க்ரீன் ஹீரோ. பெரிய திரையில் தெரிவதைத் தான் விரும்புகிறேன். யாராவது சின்ன ஸ்கீரினில் என் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, பாத்ரூம் வருதுன்னு கூட பாதியில் படத்தை விட்டுட்டு ஓடுவதை நான் அவமதிப்பதாக கருதுகிறேன். 299 ரூபாய் அல்லது 499 ரூபாய்க்கு இவை கிடைப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு அதில் பிரச்னை இருக்கிறது" என்கிறார்.

2014-ல் வெளிவந்து வெற்றி பெற்ற `Ek Villain' படத்தை இயக்கிய அதே இயக்குநர் மோஹித் சூரிதான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ஜான் ஆபிரஹாம் உடன் தாரா சுதாரியா, அர்ஜுன் கபூர் மற்றும் திஷா பட்டானி ஆகியோர் நடித்துள்ளனர்.