Published:Updated:

"அமிதாப் பச்சனுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் என்றால் அது இவர்தான்!"- ஜூனியர் என்.டி.ஆர்

Jr.NTR | ஜூனியர் என்.டி.ஆர்

"இந்திய சினிமாவில் எனக்கு நிறைய நடிகர்களைப் பிடிக்கும். ஆனால் அதில் எனது மனதிற்கு நெருக்கமானவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் அமிதாப் பச்சனின் நடிப்பு, அவர் நிற்கும் விதம், பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்." - ஜூனியர் என்.டி.ஆர்

"அமிதாப் பச்சனுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் என்றால் அது இவர்தான்!"- ஜூனியர் என்.டி.ஆர்

"இந்திய சினிமாவில் எனக்கு நிறைய நடிகர்களைப் பிடிக்கும். ஆனால் அதில் எனது மனதிற்கு நெருக்கமானவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் அமிதாப் பச்சனின் நடிப்பு, அவர் நிற்கும் விதம், பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்." - ஜூனியர் என்.டி.ஆர்

Published:Updated:
Jr.NTR | ஜூனியர் என்.டி.ஆர்

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'பிரம்மாஸ்திரா'. அயன் முகர்ஜி இயக்கிய இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். வி.மணிகண்டன், பங்கஜ் குமார் உள்ளிட்ட 5 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரியும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

ஜூனியர் என்.டி.ஆர், ரன்பீர் கபூர்
ஜூனியர் என்.டி.ஆர், ரன்பீர் கபூர்

அதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோருடன் எஸ்.எஸ்.ராஜமௌலி, நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஜூனியர் என்டிஆர், "'ராக்ஸ்டார்' படத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பு எனக்கு ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் ஊக்கத்தையும் கொடுத்தது. இந்திய சினிமாவில் எனக்கு நிறைய நடிகர்களைப் பிடிக்கும். ஆனால் அதில் எனது மனதிற்கு நெருக்கமானவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் அமிதாப் பச்சனின் நடிப்பு, அவர் நிற்கும் விதம், பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி அமிதாப் பச்சனுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் என்றால் அது ரன்பீர்தான். அவருடைய படங்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். அதில் எனக்கு மிகவும் பிடித்த படம் 'ராக்ஸ்டார்'. இன்று அவருடன் இந்த மேடையைப் பகிர்ந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று ரன்பீர் கபூரைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.