Published:Updated:

Salaam Venky: "ரேவதி இயக்குநராக இத்திரைப்படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார்!"- கஜோல் நெகிழ்ச்சி

Salaam Venky: ரேவதி, கஜோல்

"ரேவதி இத்திரைப்படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார். நீங்கள் படம் பார்க்க உள்ளே சென்று திரும்பும் போது நிச்சயம் நம்பிக்கையாக உணர்வீர்கள்!"- கஜோல்

Salaam Venky: "ரேவதி இயக்குநராக இத்திரைப்படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார்!"- கஜோல் நெகிழ்ச்சி

"ரேவதி இத்திரைப்படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார். நீங்கள் படம் பார்க்க உள்ளே சென்று திரும்பும் போது நிச்சயம் நம்பிக்கையாக உணர்வீர்கள்!"- கஜோல்

Published:Updated:
Salaam Venky: ரேவதி, கஜோல்

பிரபல பாலிவுட் நடிகையான கஜோல் 'மின்சாரக் கனவு' படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி - 2' படத்தில் நடித்திருந்தார். தமிழில் இரண்டு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு.

Salaam Venky
Salaam Venky

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். ஆனால் சமீபகாலமாகத் தனக்கான கதைகளை மிகவும் கவனமாகத் தேர்வு செய்து சொற்பமான சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் கஜோல் தற்போது 'Salaam Venky' எனும் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக 'Duchenne Muscular Dystrophy' என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனின் தாயாக நடித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி 'புதுமைப் பெண்', 'அரங்கேற்ற வேளை', 'தேவர் மகன்', 'அஞ்சலி', 'மௌன ராகம்' போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்து 90'ஸ் கால திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேவதி, தற்போது பாலிவுட்டில் இயக்குநராக வலம்வரத் தொடங்கியுள்ளார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் 'Duchenne Muscular Dystrophy' என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகன் - தாய்க்கும் இடையேயான அன்பான உறவைப் பற்றிப் பேசுகிறது. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ரேவதி, கஜோல்
ரேவதி, கஜோல்

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ள கஜோல், இத்திரைப்படம் குறித்தும் திரையுலகில் ஹீரோக்களின் பங்கு எத்தகையது என்பது குறித்தும் பேசியுள்ளார்.

"இத்திரைப்படத்தில் இருக்கும் சுஜாதா மற்றும் வெங்கி, தாய் மற்றும் மகன் இருவரின் உறவு மிகவும் தூய்மையானது.

அவர்களது உறவு எப்படி இன்னும் நெருக்கமாகவும், சிக்கலானதாகவும் மாறுகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதைக்களம். ரேவதி இத்திரைப்படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார். நீங்கள் படம் பார்க்க உள்ளே சென்று திரும்பும் போது நிச்சயம் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இப்படம் உங்களுக்கு ஏதோ ஒன்றைச் சொல்லும், நிச்சயம் நம்பிக்கையாக உணர்வீர்கள்" என்று கூறியுள்ளார்.

கஜோல்,ரேவதி
கஜோல்,ரேவதி

மேலும் திரையுலகில் ஹீரோக்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் கஜோல் பேசியுள்ளார். "ஒரு நடிகராக இருந்து பெரிய ஹீரோவாக அல்லது ஹீரோயினாக மாறுபவர்களிடம் மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்தப் பொறுப்பை அவர்கள் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். இந்தத் திரைத்துறையின் தலைவிதியை தங்கள் தோள்களில் தாங்கிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்" என்று கூறியுள்ளார்.