சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கங்கனா ரணாவத் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பகிர்ந்து வருவது வழக்கம்.
அந்தவகையில் எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார். ``எனக்கு விரும்பியதைச் சொல்கிறேன், அதன் விளைவாக பணத்தை இழக்க நேரிட்டால், அது நடக்கட்டும்" என எலான் மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

தற்போது அதனை மேற்கோள் காட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கங்கனா, " இதுதான் பண்பு, இதுதான் உண்மையான சுதந்திரமும் வெற்றியும் கூட. அரசியல்வாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் எதிராக நான் பேசியபோது ஒரே இரவில் நான் ஒப்பந்தமான 20 முதல் 25 கம்பெனிகள் என்னை ஒப்பந்ததிலிருந்து நீக்கி விட்டனர். இதனால் வருடத்திற்கு எனக்கு ரூ 30 லிருந்து 40 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. ஆனால் நான் இப்போது சுதந்திரமாக இருக்கின்றேன். நான் விரும்பியதை கூற யாரும் தடுக்க முடியாது.. இதே போல் தனக்கு பிடித்ததை செய்யும் எலான் மஸ்க்கை நான் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.