எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியது முதல் டாக் அஃப் தி டவுனாக மாறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை, ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டம், ப்ளூ டிக் கட்டண சர்ச்சை போன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், 'ஆதார் கார்டின் மூலம் ப்ளூ டிக் வழங்கலாம்' என எலான் மஸ்க்கிற்கு யோசனை வழங்கியுள்ளார்.

இது பற்றி தனது இஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கங்கனா, "ப்ளூ டிக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ப்ளூ டிக் இல்லாத நபர்கள் முறையான ஆவணங்கள் இயலாத நபர்களா? உதாரணமாக, எனது அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு நான் ப்ளூ டிக் பெற்ற நபராக இருக்கிறேன். ஆனால், எனது அப்பாவிற்கு ப்ளூ டிக் கிடைக்கவில்லை. அப்படியென்றால் அவர் முறையான ஆவணங்கள் இல்லாத நபரா? இந்தக் குழப்பங்களைத் தவிர்க்க 'ஆதார் கார்டு' பெற்றவர்களுக்கு 'ப்ளூ டிக்' தரலாமே!" என்று கூறியுள்ளார்.