Published:Updated:

Kangana Ranaut: அரசியலுக்கு வருவது குறித்து கங்கனா ரணாவத் சொல்வது என்ன?

கங்கனா ரனாவத்

`தலைவி', `எமர்ஜென்சி' இரண்டு படங்களிலும் அரசியல் தலைவர்களின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கங்கான ரணாவத் அரசியலில் களமிறங்குவாரா என்ற கேள்வி பலராலும் அடிக்கடி முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கங்கனா ரணாவத் சினிமா, சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்துப் பதிவிடுவது வழக்கம்.

அவற்றில் சில சர்ச்சையாவதும் உண்டு. இதுமட்டுமின்றி அவர் தலைவி, எமர்ஜென்சி போன்று அரசியல் தலைவர்களின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், கங்கனா அரசியலில் களமிறங்குவாரா என்ற கேள்வி பலராலும் அடிக்கடி முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

அந்தவகையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றிலும் அவர் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த கங்கனா ரனாவத், “ நாம் அரசியல்வாதியாக வேண்டும் என்று நாமே கூறிக்கொள்வது தவறான ஒன்று. மாறாக நாம் அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்களும், பொதுமக்களும்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எப்போதும் கலைத் துறையோடு இணைந்திருக்கதான் ஆசை. ஆனால் நாட்டுக்காக சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை ஏற்பேன். என் நாட்டிற்கு நான் தேவைப்பட்டால்… நான் கண்டிப்பாக இருக்கிறேன்." என்றார்.