Published:Updated:

Oscars 2023: "இந்தியப் பெண்கள் சிறந்தவர்கள்!"- ஆஸ்கர் மேடையேறிய தீபிகா படுகோன் பற்றி கங்கனா ரணாவத்

தீபிகா படுகோன், கங்கனா ரணாவத்

ஆஸ்கர் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை தீபிகா படுகோனைப் பாராட்டி கங்கனா ரணாவத் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:

Oscars 2023: "இந்தியப் பெண்கள் சிறந்தவர்கள்!"- ஆஸ்கர் மேடையேறிய தீபிகா படுகோன் பற்றி கங்கனா ரணாவத்

ஆஸ்கர் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை தீபிகா படுகோனைப் பாராட்டி கங்கனா ரணாவத் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

தீபிகா படுகோன், கங்கனா ரணாவத்

95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தியா சார்பில் சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய 'All that Breathes', சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய 'The Elephant Whisperers' மற்றும் சிறந்த பாடல் பிரிவில் கீரவாணி இசையில் 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆகியவை பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

'RRR',  'The Elephant Whisperers'
'RRR', 'The Elephant Whisperers'

இந்நிலையில் 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும், 'The Elephant Whisperers' ஆவணக்குறும்படமும் ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவிற்குப் பெருமையை சேர்த்துள்ளது. இதற்குப் பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விழாவின் கூடுதல் சிறப்பாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆஸ்கர் விருதினை வழங்குபவர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். ரெட் கார்பெட் நிகழ்வில் இடம்பெற்றிருந்த தீபிகா, கறுப்பு நிற உடையில் நடந்துவந்து அனைவரையும் கவர்ந்தார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

இதனிடையே ஆஸ்கர் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை  தீபிகா படுகோனைப் பாராட்டி கங்கனா ரணாவத் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “தீபிகா படுகோன் எவ்வளவு அழகாக இருக்கிறார். மிகப்பெரிய மேடையில் இந்தியாவின் பெருமையை அவரது மென்மையான தோள்களில் சுமந்துகொண்டு மிகவும் நம்பிக்கையுடன் பேசுவது என்பது அவ்வளவு எளிதல்ல. தலைநிமிர்ந்து நம் நாட்டின் பெருமையைப் பேசி இந்தியப் பெண்கள் சிறந்தவர்கள் என்பதை தீபிகா படுகோன் நிரூபித்துக் காட்டியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.