Published:Updated:

கோயில்களில் ஷார்ட்ஸ், டி-சர்ட் அணியக் கூடாது; கடுமையான விதிமுறைகள் வேண்டும்" - கங்கனா ட்வீட்

Kangana Ranaut |கங்கனா ரணாவத்

கோயில்களில் ஷார்ட்ஸ், டி-சர்ட் அணிவதைக் கண்டித்து நடிகை கங்கனா ராணாவத் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

Published:Updated:

கோயில்களில் ஷார்ட்ஸ், டி-சர்ட் அணியக் கூடாது; கடுமையான விதிமுறைகள் வேண்டும்" - கங்கனா ட்வீட்

கோயில்களில் ஷார்ட்ஸ், டி-சர்ட் அணிவதைக் கண்டித்து நடிகை கங்கனா ராணாவத் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

Kangana Ranaut |கங்கனா ரணாவத்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத், தற்போது இந்திரா காந்தியின் பயோபிக்கான 'Emergency' மற்றும் 'சந்திரமுகி-2' திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சர்ச்சையான ட்வீட்கள் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள கங்கனா, தொடர்ந்து பல பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது கோயில்களில் ஷார்ட்ஸ், டி-சர்ட் அணிவதைக் கண்டித்து ட்வீட் ஒன்றைப் பதிவுட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்கனா, "இவை மேற்கத்திய ஆடைகள், வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவை. நான் ஒருமுறை வாட்டிக்கனிற்கு ஷார்ட்ஸ், டி-சர்ட் அணிந்து சென்றேன், ஆனால், அந்த வளாகத்திற்குள் செல்வதற்குக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு, நான் தாங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று என் உடைகளை மாற்றிவிட்டு வந்தேன். அதன்பின்தான் எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இங்கு இந்த கோமாளிக் கூட்டங்கள் சாதாரணமாக இரவு நேரத்தில் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதை தவறான உள்நோக்கத்துடன் அணியவில்லை என்பது புரிகிறது. இருப்பினும், இதுபோன்ற முட்டாள்களைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகள் இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.