Published:Updated:

"யாரேனும் என் மீது ஆசிட் வீசிவிடுவார்களோ என்ற பயம் எனக்குள் எப்போதும் இருக்கும்!" - கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத்

"எப்போதெல்லாம் முகம் தெரியாத நபர்கள் பைக்கிலோ அல்லது காரிலோ என்னைக் கடந்து செல்கிறார்களோ அப்போதெல்லாம் இந்தப் பயம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும். என்னை அறியாமல் என் கைகளைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்வேன்!" - கங்கனா ரணாவத்

"யாரேனும் என் மீது ஆசிட் வீசிவிடுவார்களோ என்ற பயம் எனக்குள் எப்போதும் இருக்கும்!" - கங்கனா ரணாவத்

"எப்போதெல்லாம் முகம் தெரியாத நபர்கள் பைக்கிலோ அல்லது காரிலோ என்னைக் கடந்து செல்கிறார்களோ அப்போதெல்லாம் இந்தப் பயம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும். என்னை அறியாமல் என் கைகளைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்வேன்!" - கங்கனா ரணாவத்

Published:Updated:
கங்கனா ரணாவத்
நேற்று டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் தாக்குதல் நடந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரத்தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'சிறுமி மீது ஆசிட் வீசியவர்களைப் பொதுவெளியில் வைத்துத் தூக்கிலிட வேண்டும்' என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

இதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், தனது சகோதரி ரங்கோலி ஆர் சண்டேலுக்கு நடந்த ஆசிட் தாக்குதலை நினைவுகூர்ந்து, அவர் அனுபவித்த வேதனைகளைப் பற்றி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். மேலும், கவுதம் கம்பீர் சொன்னது சரிதான், ஆசிட் தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக நாம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கங்கனா, "எனது டீனேஜ் பருவத்தின்போது ​​என் சகோதரி ரங்கோலி ஆர் சண்டேல், சாலைகளில் பெண்களைக் கிண்டல் செய்யும் ஒரு நபரால் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானாள். என் சகோதரி அதிலிருந்து குணமாகி மீண்டுவர 52 அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டியிருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டாள் அவள். எங்கள் குடும்பமும் அளவற்ற வேதனைக்குள்ளானது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு என்னைக் கடந்து செல்லும் யாரேனும் என் மீது ஆசிட் வீசிவிடுவார்களோ என்ற பயம் எனக்குள் எப்போதும் இருக்கும். அதனால் பயந்து என் முகத்தை மூடிக்கொள்வேன்.

கங்கனா ரணாவத், ரங்கோலி ஆர் சண்டேல் (இன்ஸ்டாகிராம் ஸ்டோரி)
கங்கனா ரணாவத், ரங்கோலி ஆர் சண்டேல் (இன்ஸ்டாகிராம் ஸ்டோரி)

எப்போதெல்லாம் முகம் தெரியாத நபர்கள் பைக்கிலோ அல்லது காரிலோ என்னைக் கடந்து செல்கிறார்களோ, அப்போதெல்லாம் இந்த பயம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும். என்னை அறியாமல் என் கைகளைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்வேன். இந்தக் கொடுமைகள் இன்னும் நிற்கவில்லை... தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தக் குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கவுதம் கம்பீர் சொன்னதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த ஆசிட் தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக நாம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்" என்று கூறியுள்ளார்.