Published:Updated:

Emergency: நாடாளுமன்ற வளாகத்தில் ‘எமர்ஜென்சி’ படப்பிடிப்புக்கு அனுமதி கோரிய கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத்

நாடாளுமன்ற வளாகத்தில் எமர்ஜென்சி படத்தின் படப்பிடிப்பை நடத்த கங்கனா ரனாவத் அனுமதி கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Emergency: நாடாளுமன்ற வளாகத்தில் ‘எமர்ஜென்சி’ படப்பிடிப்புக்கு அனுமதி கோரிய கங்கனா ரனாவத்!

நாடாளுமன்ற வளாகத்தில் எமர்ஜென்சி படத்தின் படப்பிடிப்பை நடத்த கங்கனா ரனாவத் அனுமதி கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
கங்கனா ரனாவத்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படம் 'எமர்ஜென்சி'. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பது மட்டுமின்றி அவரே இப்படத்தை இயக்கவும் செய்கிறார். ரித்தேஷ் ஷா இப்படத்திற்கு  திரைக்கதையும், வசனமும்  எழுதியிருக்கிறார்.

இந்நிலையில்  'எமர்ஜென்சி' படத்தின் சில காட்சிகளை நாடாளுமன்ற வளாகத்திலேயே படப்பிடிப்பு செய்தால் தத்துரூபமாக இருக்கும் என்று படக்குழு ஆலோசித்திருக்கிறது. இதற்காக படக்குழுவினர் நாடாளுமன்றத்தின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக மக்களவை செயலகத்திற்கு கங்கனா ரனாவத் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

பொதுவாகவே,  நாடாளுமன்ற வளாகத்தில்  படப்பிடிப்பு நடத்தவோ, வீடியோ எடுக்கவோ தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே நாடாளுமன்ற வளாகம் பயன்படுத்தப்பட்டு  வருகிறது. அதிலும் குறிப்பாக தூர்தர்ஷன்  மற்றும் சான்சாத் தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே அனுமதியுண்டு. இதனால், நடிகை கங்கனா ரனாவத்தின் கோரிக்கை, நிராகரிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.