Published:Updated:

"வில் ஸ்மித் போலவே நானும் அறைந்திருப்பேன்" -கங்கனா ரணாவத் அதிரடி கமென்ட்!

கங்கனா ரணாவத்

ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கியது சரியா என்கிற கேள்விக்கு நானும் அதைதான் செய்திருப்பேன் என்கிறார் கங்கனா ரணாவத்.

"வில் ஸ்மித் போலவே நானும் அறைந்திருப்பேன்" -கங்கனா ரணாவத் அதிரடி கமென்ட்!

ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கியது சரியா என்கிற கேள்விக்கு நானும் அதைதான் செய்திருப்பேன் என்கிறார் கங்கனா ரணாவத்.

Published:Updated:
கங்கனா ரணாவத்

வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை ஆஸ்கர் விழா மேடையில் அறைந்தது பரவலான பேசுபொருளானது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் உலகெங்கிருந்தும் எழுந்த நிலையில் பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத், வில் ஸ்மித்துக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். "ஏதோவொரு முட்டாள் என்னுடைய அம்மாவின் அல்லது சகோதரியின் நோய்க்குறைப்பாட்டைப் பல முட்டாள்கள் சிரிப்பதற்காக கேலி செய்தால் நானும் வில் ஸ்மித்தைப் போலவே அறைந்திருப்பேன்.... என்னுடைய லாக் அப் ஷோவுக்கு அவர் வருவார் என நம்புகிறேன்" என்று கமென்ட் செய்து வில் ஸ்மித் கிரிஸ்ஸைத் தாக்கும் படத்தைப் பகிர்ந்திருக்கிறார், கங்கனா.

கங்கனா ரணாவத் Instagram Story
கங்கனா ரணாவத் Instagram Story

ஆஸ்கர் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாவின் நோய்க்குறைப்பாட்டை 'GI ஜேன்' படத்தின் கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு கேலி செய்த கிறிஸ் ராக்கை விழா மேடையிலேயே வில் ஸ்மித் தாக்கியது வைரலாகியது. அதற்காக அகாதமியிடமும் சக விருதாளர்களிடமும் மன்னிப்பு கோரிய வில் ஸ்மித், கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்கவில்லை. இது தொடர்பாக ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பு, ஹாலிவுட் யூனியன் உள்ளிட்ட அமைப்புகள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தன. அதன் பிறகு வில் ஸ்மித், கிறிஸிடம் மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றை தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வின்மீது ஆஸ்கர் அமைப்பின் விதிகள், கலிபோர்னியா சட்டமுறைகளின்படி விசாரணை நடத்த இருப்பதாக ஆஸ்கர் அமைப்பு தெரிவித்துள்ளது.