Published:Updated:

"நான் மீண்டும் ட்விட்டருக்கு வந்தால் உங்களுக்கு நிறைய கன்டென்ட் கிடைக்கும்!"- கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத்

ட்விட்டரில் தனது கணக்கு ஒரு வருடத்திற்குள் இடைநிறுத்தப்பட்டதாகவும், தனது பதிவுகளுக்கு இன்ஸ்டகிராமில் இருந்து மூன்று முறை எச்சரிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும் கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சினிமா மட்டுமின்றி அரசியல் குறித்தும் தனது விமர்சனங்களை முன்வைப்பவர். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா, பல்வேறு தடாலடியான கருத்துக்களைப் பகிர்ந்து வருவதும் உண்டு. சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு ட்விட்டர் விதிகளை இவர் தொடர்ந்து மீறுகிறார் என்று கங்கனாவின் ட்விட்டர் கணக்கு மே 2021-ல் இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரின் ட்விட்டர் தடை குறித்துப் பேசியுள்ளார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

"நான் ஒரு வருடம் ட்விட்டரில் இருந்தேன், ட்விட்டரால் என்னை ஒரு வருடம் கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்ஸ்டகிராமில் எனது பதிவுகளுக்காக மூன்று முறை எச்சரிக்கையைப் பெற்றுள்ளேன். என்னுடைய குழு எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குப் பொறுப்பேற்றதால் தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் மீண்டும் ட்விட்டருக்கு வந்தால், மக்களின் வாழ்க்கை பரபரப்பாக மாறும். ஆனால் எனது வாழ்க்கை சிக்கலாக மாறும். ஏனெனில் என் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. நான் ட்விட்டரில் இல்லாததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் எனது கணக்கு புதுப்பிக்கப்பட்டால், கண்டிப்பாக உங்களுக்கு நிறைய கன்டென்ட் கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்.