Published:Updated:

"எனக்கும் அவர்களுக்குமான சண்டையல்ல இது" - கங்கனா vs அலியா பட்; சண்டையும் பின்னணியும்!

கங்கனா vs அலியா பட்

கங்கனா ரானாவத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்தை மறைமுகமாக சாடியுள்ளார். கங்கனா ஏற்கெனவே அலியா பட் பற்றி கடுமையாக பேசியிருந்தார்.

"எனக்கும் அவர்களுக்குமான சண்டையல்ல இது" - கங்கனா vs அலியா பட்; சண்டையும் பின்னணியும்!

கங்கனா ரானாவத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்தை மறைமுகமாக சாடியுள்ளார். கங்கனா ஏற்கெனவே அலியா பட் பற்றி கடுமையாக பேசியிருந்தார்.

Published:Updated:
கங்கனா vs அலியா பட்

கங்கனா ரானாவத் நடிப்பில் புதிதாக வெளிவர இருக்கும் 'தாகத்' படத்தின் போஸ்டரை அவருடைய சகோதரியும் மேனேஜருமான ரங்கோலி சாண்டல், 'அவருடைய (கங்கானா) சாதனைகளை அவரே தாகத் படம் மூலம் இந்த வருடம் முறியடிப்பார்' என்கிற கமென்ட்டோடு பகிர்ந்திருந்தார். அதற்கு கங்கனா அளித்துள்ள பதிலில் 'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்தை மறைமுகமாக சாடியுள்ளார். இந்தப் படம் அலியா பட் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

ரங்கோலி சாண்டல் கங்கனாவின் சாதனைகளைக் குறிப்பிடும் போது '200 கோடி பட்ஜெட் இல்லை, பெரிய இயக்குநர் இல்லை, பெரிய ஹீரோ இல்லை, எந்தவித மாஃபியா விளம்பரங்களும் இல்லை, உரி மற்றும் பால் தாக்கரே போன்ற படங்களுடன் போட்டி, உண்மையான திறமை, இப்போதும் அந்த சாதனை முறியடிக்கப்படாத உயரத்தில்' எனப் பதிவிட்டு இருக்கிறார். கங்கனாவின் மணிகர்ணிகா படத்தையே அவர் குறிப்பிடுகிறார்.

கங்கனா ஸ்டோரிஸ்
கங்கனா ஸ்டோரிஸ்

இந்த ஸ்டோரியைப் பகிர்ந்துள்ள கங்கனா, 'திரைப்பட மாஃபியாக்களின் கணிதம் இது. 75 கோடி படம் முதல் மூன்று நாட்களில் 43 கோடி வசூல் செய்ததை மிகப்பெரிய தோல்வி என்கிறார்கள். 160 கோடி படம் 35 கோடி மட்டுமே வசூல் செய்ததை சூப்பர் ஹிட் என்கிறார்கள்' எனப் பொரிந்து தள்ளியிருக்கிறார் கங்கனா. அவருடைய ஜான்சி ராணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மணிகர்ணிகா படத்தோடு இப்போது வெளியாகி இருக்கும் கங்குபாய் கத்தியவாடி படத்தை ஒப்பிட்டுள்ளார். மேலும், "எனக்கும் அவர்களுக்குமான சண்டையல்ல இது. உண்மையான திறமையை, நேர்மையான உழைப்பை எந்தவித சிஸ்டமோ ராக்கெட் விளம்பரமோ, மாபியாவோ கூட தோற்கடிக்க முடியாது."

கங்கனா இதற்கு முன்பு அலியாவை 'டாடிஸ் ஏஞ்சல்' என்றும் 'கவர்ச்சியான இளம் அற்பப்பெண்' என்றும் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலளித்த அலியா இது போன்ற எதிர்மறை கருத்துக்கள் பற்றி தனக்கு எந்தவித உணர்வும் இல்லை. அவை தன்னை ஒருபோதும் வந்தடையாது எனவும் தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism