Published:Updated:

"பாசிட்டிவ் எனர்ஜி தரும் சூழல் வேண்டும்!" - ட்ரோல்களால் ட்விட்டரை விட்டு வெளியேறிய கரண் ஜோகர்

கரண் ஜோகர்

'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் ட்விட்டரை விட்டு வெளியேறி இருக்கிறார். காரணம் என்ன தெரியுமா?

"பாசிட்டிவ் எனர்ஜி தரும் சூழல் வேண்டும்!" - ட்ரோல்களால் ட்விட்டரை விட்டு வெளியேறிய கரண் ஜோகர்

'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் ட்விட்டரை விட்டு வெளியேறி இருக்கிறார். காரணம் என்ன தெரியுமா?

Published:Updated:
கரண் ஜோகர்

பாலிவுட்டில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர். `காஃபி வித் கரண்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். `Dharma Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல பாலிவுட் படங்களையும் தயாரித்துவருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாகப் பாலிவுட்டில் நிகழ்ந்துவரும் 'பாலிவுட் திரைப்படங்களை நிராகரிக்க வேண்டும்' என்ற 'பாய்காட் பாலிவுட் (Boycott Bollywood)' பிரச்னையால் பாலிவுட் திரைப்படங்கள் பல தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இதனால் கரண் ஜோகர் தயாரித்த படங்கள் மற்றும் அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. அதுமட்டுமல்லாமல் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு கரண் ஜோகரை நெட்டிசன்கள் குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

கரண் ஜோகர் ட்விட்டர் கணக்கு - தற்போதைய நிலை
கரண் ஜோகர் ட்விட்டர் கணக்கு - தற்போதைய நிலை

இதைத்தொடர்ந்து கரண் ஜோகரை 'Nepotism' என்ற பெயரில் கேலி செய்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் இதுபோன்ற ட்ரோல்கள் குறித்தும் 'பாய்காட் பாலிவுட்(Boycott Bollywood)' பிரச்னை குறித்தும் பேசிய கரண் ஜோகர், "பாலிவுட் மிகவும் மோசமான காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மிகவும் நெகட்டிவான சூழலில் பாலிவுட் திரையுலகம் இருப்பதாக உணர்கிறேன். இது நல்லதல்ல. இது நான் நினைத்துப் பார்க்காத, கற்பனை செய்யாத ஒன்று. இது சரியானது அல்ல என்று பலரும் கூறிவருகின்றனர். இருப்பினும் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். என் நிறுவனத்திற்கும், என் அம்மாவிற்கும், என் குடும்பத்திற்கும் நான் சொல்வது என்னவென்றால் நாம் உறுதியாக இருக்கவேண்டும். இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது மிகவும் முக்கியமானது. அதைத்தான் நான் செய்து வருகிறேன்" என்று கூறியிருந்தார்.

கரண் ஜோஹர்
கரண் ஜோஹர்

இதையடுத்து தற்போது, "பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்த சூழலை நோக்கிச் செல்ல விரும்புகிறேன். அதற்கான முதற்கட்டச் செயல் இது. குட்பை ட்விட்டர்!" என்று கூறி தான் ட்விட்டரை விட்டு வெளியேறுவதாகக் கூறியிருந்தார். பின்னர் சில மணி நேரத்தில் அவரது ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுவிட்டது. இனி அவர் தனது முழுக் கவனத்தையும் தனது பணிகளில் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.