Published:Updated:

"பாலிவுட் மிகவும் மோசமான காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!"- கரண் ஜோஹர் வருத்தம்

கரண் ஜோஹர்

"நெகட்டிவான சூழலில் பாலிவுட் திரையுலகம் இருப்பதாக உணர்கிறேன்" என்று கரண் ஜோஹர் பேசியிருக்கிறார்.

"பாலிவுட் மிகவும் மோசமான காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!"- கரண் ஜோஹர் வருத்தம்

"நெகட்டிவான சூழலில் பாலிவுட் திரையுலகம் இருப்பதாக உணர்கிறேன்" என்று கரண் ஜோஹர் பேசியிருக்கிறார்.

Published:Updated:
கரண் ஜோஹர்

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர். `காபி வித் கரண்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். இதில், பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கம். இதனிடையே பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் தொடர்ந்து எழும் சர்ச்சைகள் குறித்தும், பாய்காட் பிரசாரத்தால் பாலிவுட் படங்களின் தொடர் தோல்விக் குறித்தும், கரண் ஜோஹரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

கரண் ஜோஹர்
கரண் ஜோஹர்

அதற்குப் பதிலளித்த அவர், "பாலிவுட் மிகவும் மோசமான காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மிகவும் நெகட்டிவான சூழலில் பாலிவுட் திரையுலகம் இருப்பதாக உணர்கிறேன். இது நல்லதல்ல. இது நான் நினைத்துப் பார்க்காத, கற்பனை செய்யாத ஒன்று. இது சரியானது அல்ல என்று நிறையப்பேர் கூறுகின்றனர். இருப்பினும் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். என் நிறுவனத்திற்கும், என் அம்மாவிற்கும், என் குடும்பத்திற்கும் நான் சொல்வது என்னவென்றால் நாம் உறுதியாக இருக்கவேண்டும். இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது மிகவும் முக்கியமானது. அதைத்தான் நான் செய்து வருகிறேன்" என்று கரண் ஜோஹர் பேசியிருக்கிறார்.