Published:Updated:

"சன்னி லியோன் தேவையின்றி துன்புறுத்தப்படுகிறார்!"- வழக்கை ரத்து செய்ய விரும்பும் கேரள நீதிமன்றம்

சன்னி லியோன்

சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் ஊழியர் மீது தொடரப்பட்ட கிரிமினல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்ய விரும்புவதாகக் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published:Updated:

"சன்னி லியோன் தேவையின்றி துன்புறுத்தப்படுகிறார்!"- வழக்கை ரத்து செய்ய விரும்பும் கேரள நீதிமன்றம்

சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் ஊழியர் மீது தொடரப்பட்ட கிரிமினல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்ய விரும்புவதாகக் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சன்னி லியோன்

பிரபல நடிகை சனி லியோன், கடந்த 2019-ம் ஆண்டு கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக 20 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியிருக்கிறார். ஆனால் அவர் கூறியபடி  நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அந்தப் பணத்தையும் திருப்பித் தராமல் இருந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கேரள உயர் நீதிமன்றத்தில் சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் ஊழியர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. தங்களால் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என்று சன்னி லியோன் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை நீதிமன்றம், கடந்த வருடம் நவம்பர் மாதம் நிறுத்தி வைத்திருந்தது.

சன்னி லியோன்
சன்னி லியோன்
படம்: பா.காளிமுத்து

தற்போது இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த கேரள உயர்நீதிமன்றம் சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் ஊழியர் மீது தொடரப்பட்ட கிரிமினல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. 

"இந்த வழக்கில் என்ன கிரிமினல் குற்றம் இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் சன்னி லியோன் தேவையின்றி  துன்புறுத்தப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் இந்த வழக்கை மீண்டும் மார்ச் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.