Published:Updated:

``நான் சினிமாவுக்குள் வரும்போது...''- 8 வருட சினிமா பயணம் குறித்து மனம் திறந்த கியாரா அத்வானி

கியாரா அத்வானி

"`நீ நல்ல நடிகையாக இருந்தால் இந்தத் துறையில் தொடர்ந்து இருக்க முடியும்' என்று சொன்னார்கள்" -கியாரா அத்வானி

``நான் சினிமாவுக்குள் வரும்போது...''- 8 வருட சினிமா பயணம் குறித்து மனம் திறந்த கியாரா அத்வானி

"`நீ நல்ல நடிகையாக இருந்தால் இந்தத் துறையில் தொடர்ந்து இருக்க முடியும்' என்று சொன்னார்கள்" -கியாரா அத்வானி

Published:Updated:
கியாரா அத்வானி

கியாரா அத்வானி பாலிவுட்டில் அறிமுகமாகி 8 வருடங்கள் ஆகின்றன. 2014-ம் ஆண்டில் வெளிவந்த `Fugly' படம் தான் கியாராவுக்கு பாலிவுட் என்ட்ரி கேட். படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது கியாராவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

"நான் சினிமாவுக்குள் வரும் போது, முதல் படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை. படம் ஹிட் ஆவதைத் தாண்டி `நீ நல்ல நடிகையாக இருந்தால் இந்தத் துறையில் தொடர்ந்து இருக்க முடியும்' என்று சொன்னார்கள். கமர்ஷியல் வெற்றி, உங்கள் பயணத்தைத் தீர்மானிக்காது. பிளாக்பஸ்டர் ஹிட் பொறுத்து அது அமைவதில்லை."

கியாரா அத்வானி
கியாரா அத்வானி

மேலும், "நல்ல நடிகராக இருந்தால் நீங்கள் இங்கு தாக்குபிடிக்க முடியும். இப்போது எனது படங்களைப் பின்னோக்கி பார்த்தால், நான் எனது நடிப்புக்காக பல பாராட்டுகள் பெற்றிருக்கிறேன். இது போன்ற பல்வேறு விதமான கதாபாத்திரங்கள் கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் கான்ஷியஸாக மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யவில்லை, அவை தான் என்னைத் தேடி வந்தன. நான் இந்த வெற்றிகளில் சந்தோஷமாகவே உணர்கிறேன், ஆனால் இவை இயல்பாக நடந்ததே. `கபீர் சிங்' அப்புறம் `குட் நியூஸ்' மற்றும் `கில்ட்டி' இப்படி அடுத்து அடுத்து படங்கள். எனது பலவித நடிப்புத் திறனை வெளிப்படுத்த இயல்பாகவே இந்த வாய்ப்புகள் கிடைத்தன."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இப்போது கியாராவின் நடிப்பில் உருவான படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஜூன் 20-ல் `Bhool Bhulaiyaa 2' படமும் ஜூன் 24-ல் `Jugjugg Jeeyo' படமும் வெளியாகின்றன. இப்போது இந்தப் படங்களுக்கான ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கிறார், கியாரா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism