Published:Updated:

"`ஆதிபுருஷ்' பிரபாஸுடன் காதல் திருமணமா?" பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் விளக்கம்

கிருத்தி சனோன், பிரபாஸ்

கிருத்தி சனோனும், பிரபாஸும் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

"`ஆதிபுருஷ்' பிரபாஸுடன் காதல் திருமணமா?" பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் விளக்கம்

கிருத்தி சனோனும், பிரபாஸும் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

Published:Updated:
கிருத்தி சனோன், பிரபாஸ்

பிரபல பாலிவுட் நடிகையான கிருத்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள `ஆதிபுருஷ்' திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்துள்ளார். இதனிடையே, நடிகர் வருண் தவானுடன் இணைந்து கிருத்தி சனோன் நடித்திருந்த `Bhediya' திரைப்படம் கடந்த நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பிரபாஸ், கிருத்தி சனோன்
பிரபாஸ், கிருத்தி சனோன்

இதையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் வருண் தவான், "கிருத்தியின் பெயர் ஒருவரின் இதயத்தில் உள்ளது. அந்த நபர் மும்பையில் இல்லை, ஏனென்றால் அவர் இப்போது தீபிகா படுகோனுடன் ஷூட்டிங்கில் இருக்கிறார்" என்று தெரிவித்திருந்தார். தீபிகாவுடன் படம் நடித்து வருவது தெலுங்கு நடிகரும், கிருத்தியுடன் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்தவருமான பிரபாஸ். அவரைத்தான் கிருத்தி டேட்டிங் செய்வதாக மறைமுகமாகக் கேலி செய்திருந்தார் வருண் தவான். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து கிருத்தி சனோனும் பிரபாஸும் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் வதந்திகள் பரவின.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக நடிகை கிருத்தி சனோன், "காதலெல்லாம் ஒன்றும் இல்லை... எங்கள் பேடியா (வருண் தவான்) ரியாலிட்டி ஷோவில் கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டார். இது பல ட்ரோல்களுக்கும், வதந்திகளுக்கும் வழிவகுக்கும் வகையில் அமைந்துவிட்டது. சில வலைதளங்கள் எனது திருமணத் தேதியை அறிவிக்கும் வரையிலும் இந்த விவகாரம் சென்றுவிட்டது. இதுபோன்ற வதந்திகளும் செய்திகளும் போலியானவை, ஆதாரமற்றவை" என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி: கிருத்தி சனோன், வருண் தவாண்
இன்ஸ்டாகிராம் ஸ்டோரி: கிருத்தி சனோன், வருண் தவாண்

இதைத்தொடர்ந்து நடிகர், வருண் தவான் கிருத்தி சனோனின் இப்பதிவைக் குறிப்பிட்டு, "வேடிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சேனல்கள் இந்த காணொலியை எடிட் செய்து பதிவிட்டிருந்தன. நாங்கள் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டோம். உங்கள் கற்பனையை இப்படியெல்லாம் ஓட விடாதீர்கள்" என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

இதைக் கண்ட நெட்டிசன்கள் படத்தின் புரொமோஷனுக்காக சில பிரபலங்கள் இப்படி வதந்திகளைப் பரப்பி விளம்பரம் தேடிக்கொள்வது டிரெண்டாகிவிட்டது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.