Published:Updated:

`உறவும் பிரிவும் நிறைய கற்றுத் தந்திருக்கின்றன!' - விருது விழாவில் தீபிகா படுகோன் உருக்கம்

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

மனஅழுத்தம், பதற்றத்துக்கு எதிரான சிறந்த விழிப்புணர்வுச் செயல்பாட்டுக்காகத் தீபிகாவுக்கு விருது வழங்கப்பட்டது.

உலகப் பொருளாதார அமைப்பு 2020-ம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது விழாவை ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரத்தில் நேற்று நடத்தியது. இந்த விழாவில் கலந்துகொண்டு கிரிஸ்டல் விருது பெற்றார், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். மனஅழுத்தம், பதற்றத்துக்கு எதிரான சிறந்த விழிப்புணர்வுச் செயல்பாட்டுக்காகத் தீபிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

`நாம் பயப்படவில்லை என்பதில் பெருமைகொள்கிறேன்’ - ஜே.என்.யூ போராட்டத்தில் கலந்துகொண்ட தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

விருதைப் பெறுவதற்காக மேடையேறிய தீபிகா பேசியபோது, "மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவோரை 'நீங்கள் தனி ஆள் இல்லை' என்று சொல்லித் தேற்றுவேன். உறவும் பிரிவும் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கின்றன. மனிதர்களின் மன அழுத்தத்தால் இந்திய மதிப்பில் 7,11,910 கோடி வரையிலும் உலகப் பொருளாதாரம் பாதிப்பைச் சந்திக்கிறது. மனப்பதற்றம் என்பது குணமாக்கக்கூடிய சாதாரணமான ஒரு பிரச்னைதான். இந்த நொடியில்கூட உலகில் ஒருவர் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டுதான் இருக்கிறார். இந்த நிலை மாற வேண்டும். அன்பும் மகிழ்ச்சியும் பரவினாலே மனஅழுத்தத்தையும் பதற்றத்தையும் விரட்டலாம்" என்றார்.

தன்னார்வ அமைப்பொன்றை உருவாக்கியிருக்கிற தீபிகா, அதன்மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். தான் சந்தித்த மன உளைச்சல்களால் தனது வாழ்வில் நேர்ந்த அனுபவங்களையும் அவற்றிலிருந்து மீண்டு வந்ததையும் பற்றி மாணவர்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்துவதோடு, பதற்றத்தைப் போக்கும் வழிமுறைகளைக் கற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறார்தீபிகா.

சோகம் வேறு; மன அழுத்தம் வேறு' - ஸ்ட்ரெஸ் அனுபவம் பகிரும் தீபிகா படுகோன்! #NoMoreStress

மேலும், தனது அமைப்பின் மூலம் நிதியுதவி வழங்கி, பொதுமக்களுக்காக மனநல சிகிச்சை முகாம்கள், மருத்துவ நிகழ்ச்சிகள், பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் போன்றவற்றை இலவசமாக நடத்துகிறார், தீபிகா.

பின் செல்ல