Published:Updated:

‘இந்த விஷயத்தை நிறுத்துங்கள்’ ஆடை குறித்த சர்ச்சைக்கு மலைக்கா அரோரா பதிலடி!

மலைக்கா அரோரா

திருமண விழா ஒன்றில் மலைக்கா அரோரா அணிந்து வந்த ஆடை சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டது. இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்த மலைக்கா அரோரா, தற்போது இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

‘இந்த விஷயத்தை நிறுத்துங்கள்’ ஆடை குறித்த சர்ச்சைக்கு மலைக்கா அரோரா பதிலடி!

திருமண விழா ஒன்றில் மலைக்கா அரோரா அணிந்து வந்த ஆடை சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டது. இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்த மலைக்கா அரோரா, தற்போது இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

Published:Updated:
மலைக்கா அரோரா

மாடல், நெறியாளர், நடனக் கலைஞர் மற்றும் நடிகை என பல்வேறு தளங்களில் பணியாற்றி வருபவர் மலைக்கா அரோரா. இவர் சமீபத்தில் கரீனா கபூர்கான், அம்ரிடா அரோரா மற்றும் கரிஷ்மா கபூர் ஆகியோருடன் சேர்ந்து ஃபர்ஹான் அக்தர் மற்றும் ஷிபானி தண்டேகர் ஜோடிகளின் திருமண விழாவிற்கு சென்றிருந்தார். அந்த விழாவில் அவர் அணிந்து வந்த ஆடை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது.

 மலைக்கா அரோரா
மலைக்கா அரோரா

அவர் அணிந்திருந்த ஆடை குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கேலிகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து ஒருவரின் ஆடை குறித்து பேசுவது தவறானது என்றும் ஆடை அணிவது என்பது அவரவரின் தனிப்பட்ட விஷயம் அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்து வந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்த மலைக்கா அரோரா, தற்போது இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், ‘மக்கள் போலியாக நடிக்கிறார்கள், போலியாக நடிப்பதை அவர்கள் விரும்புகிறார்கள்’ என்றும் இதே விஷயத்தை ரிஹானா, ஜெனிபர் லோபஸ், பியோன்ஸில் போன்ற வெளிநாட்டவர்கள் செய்தால் வியந்து பாராட்டும் மக்கள் இங்கே அதைச் செய்தால் அவர்களால் பாராட்ட முடிவதில்லை மாறாக ‘அவள் ஒரு தாய்’, ‘அவள் அப்படித்தான்’, ‘இதுதான் இவள்’, ‘அதுதான் இவள்’ என்றெல்லாம் கூறி வஞ்சிக்கிறார்கள் என்று கூறினார். மேலும் இதுபோன்ற விஷயங்களில் வெளிநாட்டவர்களுக்கு ஒரு நிலைப்பாடும் இங்கு ஒரு நிலைப்பாடும் என்று மக்கள் இரட்டை நிலைப்பாடு எடுப்பதாகவும் கூறிய அவர் ‘இதை உலகளாவிய கண்ணோட்டமாக பார்க்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

மேலும் சமூக வலைதளங்களில் உங்களை விமர்சிப்பது, கேலிசெய்வது போன்ற விஷயங்களை உங்கள் பெற்றோர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் ‘ இது போன்ற குப்பைகளையெல்லாம் படிப்பதை நிறுத்துங்கள், இது போன்ற விஷயங்களைக் கவனிப்பதில் உங்கள் ஆற்றலை செலவுசெய்யாதீர்கள். பார்பதற்கு நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன’ என்று தன் பெற்றோரிடம் கூறியதாக மலைக்கா அரோரா கூறியிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism