பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஐந்து வருடங்களுக்கு பின் பாலிவுட்டிற்கு திரும்பும் பிருத்விராஜ் வில்லனாக நடிக்கத் தேர்வாகியுள்ளார்.
அமிதாப் பச்சன், கோவிந்தா நடித்த படம் ‘படே மியான் சோட்டே மியான்’. இந்த படம் அதே பெயரில் ரீமேக் செய்யப்படவுள்ளது . அமிதாப் பச்சன் வேடத்தில் அக்ஷய் குமார், கோவிந்தா வேடத்தில் டைகர் ஷெராப் நடிக்கவுள்ளனர். இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். இதில் வில்லனாக நடிக்க பிருத்விராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே தனியார் நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பிரித்விராஜ் பாலிவுட்டின் கஷ்ட காலத்தை ஷாருக்கானின் பதான் படம் கூட போக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர்,” பாலிவுட்டில் உள்ளவர்களால் மட்டும் எப்படி சர்வதேச சந்தையை உருவாக்க முடிகிறது. அவர்கள் எப்படி அதனை கையாளுகிறார்கள் என்று தென்னிந்திய சினிமாவில் உள்ள எல்லோரும் ஆச்சரியப்பட்ட காலம் உண்டு. எனவே, இது ஒரு கட்டம் என்று நான் நம்புகிறேன். பாலிவுட்டிற்கு ஒரு பெரிய வெற்றி காத்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை அது ஷாருக்கானின் பதான் படமாகக் கூட இருக்கலாம். சில புதிய படங்களும் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. பதான் ஒரு முக்கியமான படமாக இருக்கலாம். அதைத்தொடர்ந்து வெளியாகும் பெரிய படங்கள் மூலம் பாலிவுட்டின் மொத்த நிலைமையும் மாறும்” என தெரிவித்துள்ளார்.