Published:Updated:

லால் சிங் சத்தா: "இந்திய ராணுவத்திற்கு எதிரான காட்சிகள் தவறானவை!"- மீரா சோப்ரா

மீரா சோப்ரா, ஆமிர் கான்

'அன்பே ஆருயிரே', 'மருதமலை' போன்ற படங்களில் நடித்த நடிகை மீரா சோப்ரா 'லால் சிங் சத்தா' படத்தைப் பற்றி விமர்சித்திருக்கிறார்.

லால் சிங் சத்தா: "இந்திய ராணுவத்திற்கு எதிரான காட்சிகள் தவறானவை!"- மீரா சோப்ரா

'அன்பே ஆருயிரே', 'மருதமலை' போன்ற படங்களில் நடித்த நடிகை மீரா சோப்ரா 'லால் சிங் சத்தா' படத்தைப் பற்றி விமர்சித்திருக்கிறார்.

Published:Updated:
மீரா சோப்ரா, ஆமிர் கான்

ஆமிர் கான் நடிப்பில் வெளியான படம் 'லால் சிங் சத்தா'. இப்படம் 1994-ல் வெளியாகிச் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்ற 'Forrest Gump' என்ற ஹாலிவுட் படத்திலிருந்து ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்படத்தைப் பலரும் விமர்சித்து வந்தனர்.

அந்த வகையில் 'லால் சிங் சத்தா' பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ராவின் உறவினரும் நடிகையுமான மீரா சோப்ரா. இவர் தமிழில் நிலா என்ற பெயரில் 'அன்பே ஆருயிரே', 'மருதமலை' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.

"'லால் சிங் தத்தா' 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு படத்தின் ரீமேக். அதனால் அந்த நாள்களில், மக்கள் அதன் ஒரிஜினல் படத்திற்குப் பின்னால் உள்ள லாஜிக் பற்றி எதுவும் கேள்வி கேட்கவில்லை. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. முக்கிய கதாபாத்திரமான லால் சிங் சத்தா (ஆமிர் கான்) படத்தில் எதற்காக நான்கு வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை" என்று அவர் கூறியிருக்கிறார்.

Laal Singh Chaddha
Laal Singh Chaddha

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "நான் உண்மையான தேசப்பற்று உடையவள். நம் ராணுவத்திற்கு எதிராகக் காண்பிக்கப்படும் காட்சிகளை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. இந்திய ராணுவத்தில் நடக்காத சில விஷயங்களை இப்படத்தில் காட்டியிருக்கின்றனர். இதுமட்டுமின்றி அடிப்படையிலேயே சில தவறான கருத்துகளையும் முன்வைத்திருக்கின்றனர்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதன்பின் அவரது திரைத்துறை வாழ்க்கையைப் பற்றிப் பேசிய அவர், "என்னால் இந்தத் திரைத்துறை தொழிலில் ஒரு அங்கமாக இருக்க முடியவில்லை. காரணம் இந்தத் துறையில் உள்ளவர்கள் தங்கள் நண்பர்களுடனும் அவர்களுக்குத் தெரிந்தவர்களுடனும் மட்டுமே வேலை செய்ய விரும்புகிறார்கள்" என்று அவர் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.