பாலிவுட்டின் தனித்துவமான இயக்குநர் அனுராக் காஷ்யப். தற்போது டோபாரா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகிறது. டாப்ஸி நடித்துள்ள இப்படத்தை ஏக்தா கபூர் தயாரித்துள்ளார். அதனை விளம்பரப்படுத்தும் வேலையில் அனுராக் காஷ்யப் ஈடுபட்டுள்ளார். அனுராக் காஷ்யப் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். ஆர்த்தி பஜாஜ் என்பவரை 1997ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2011ம் ஆண்டு நடிகை கல்கி கோச்சலினை விவாகரத்து செய்தார். இதில் முதல் மனைவி மூலம் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திடீரென அனுராக் காஷ்யப் தனது பழைய நினைவுகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். தன் முன்னாள் மனைவிகள் அவரின் இரண்டு பக்கமும் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் எனது இரண்டு தூண்கள் என்று குறிப்பிட்டுள்ளார். புகைப்படத்தில் மூன்று பேரும் சிரித்துக்கொண்டு இருப்பது போன்று இருக்கின்றனர். இதனை பார்த்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு அனுராக் காஷ்யப் படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஷோபாவில் படுத்து உறங்குவது போன்ற போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அதோடு டெல்லி கல்லூரியில் படித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் எனது பெற்றோர் 1970ம் ஆண்டு கிராமத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பிறகுதான் எனது தாயார் பட்டப்படிப்பை முடித்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். நான் சிறந்த பள்ளியில் படிக்கவேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் கடன் வாங்கினர். அதுதான் இன்றைக்கு என்னை எந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.