Published:Updated:

`ஸ்பெஷல் நபருக்கான ஸ்பெஷல் படம்' - மோடியின் அடுத்த பயோபிக் அறிவிப்பை வெளியிட்ட பிரபாஸ்!

ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம் `பி.எம்.நரேந்திர மோடி'. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட அப்படம், நரேந்திர மோடி மீண்டும் பிரதமாராகப் பதவியேற்ற பின் வெளியானது. ஆனால், படத்துக்கோ போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

Narendra Modi
Narendra Modi

இந்திய பிரதமரான நரேந்திர மோடி, இன்று தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது அடுத்த வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கான அப்டேட், தற்போது வெளியாகியுள்ளது. அதுவும், `பாகுபலி' புகழ் பிரபாஸ் தலைமையில் வெளியாகியுள்ளது. 

ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம், `பி.எம்.நரேந்திர மோடி'. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட அப்படம், நரேந்திர மோடி மீண்டும் பிரதமாராகப் பதவியேற்ற பின் வெளியானது. ஆனால், படத்துக்கோ போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. விமர்சன ரீதியாகவும் பாஸ் மார்க் தாண்டவில்லை. இதில் கொந்தளித்த பாலிவுட், ஃப்ரெஷ்ஷாக ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறது. அதுவும், அப்படத்தின் அறிவிப்பை நரேந்திர மோடியின் பிறந்தநாளான இன்று வெளியிட்டிருக்கிறது.

மன் பைராகி
மன் பைராகி
நரேந்திர மோடி

சஞ்சய் திரிபாதி இயக்கவிருக்கும் இப்படத்துக்கு, `மன் பைராகி' எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான சஞ்சய் பன்ஸாலி இப்படத்தைத் தயாரிக்கிறார். `பாகுபலி' புகழான பிரபாஸ், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ``இது ஒரு ஸ்பெஷல் நபருக்கான, ஸ்பெஷல் இயக்குநரால், ஸ்பெஷலாக எடுக்கப்பட இருக்கும் படம். இந்த நல்ல நாளில் இப்படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் நரேந்திர மோடி சார்'' என்றும் குறிப்பிட்டிருந்தார்.