Published:Updated:

"நீ பார்ப்பதற்கு ஒரு நடிகன்போல் இல்லை;நேரத்தை வீணாக்காதே எனத் துரத்தினார்கள்" - நவாசுதீன் சித்திக்

நவாசுதீன் சித்திக்

பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக், ஆரம்பகாலங்களில் திரைத்துறையில் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.

"நீ பார்ப்பதற்கு ஒரு நடிகன்போல் இல்லை;நேரத்தை வீணாக்காதே எனத் துரத்தினார்கள்" - நவாசுதீன் சித்திக்

பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக், ஆரம்பகாலங்களில் திரைத்துறையில் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Published:Updated:
நவாசுதீன் சித்திக்

பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் ஆரம்பகாலத்தில் சீனியர் நடிகர்களுக்கு டீ பரிமாறுவது, நாடகம் முடிந்த பிறகு மேடையைச் சுத்தம் செய்வது எனத் தொடங்கி இன்று திரையுலகில் சிறந்த நடிகர் என்று அனைவராலும் போற்றப்படுபவர். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இவரைப் பற்றிக் கூறியபோது “அவனை கேமரா விரும்புகிறது என்று நினைக்கிறேன். அது அவனைப் படம் பிடிக்கத் தொடங்கியவுடன், அவன் பார்வையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்து, திரையில் அவனது இருப்பை உறுதிசெய்து கொள்கிறான்...” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நவாசுதீன் சித்திக் தனது ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சியில் நடிக்க முயன்றபோது `நீ பார்ப்பதற்கு ஒரு நடிகன்போல் இல்லை. உன்னை நடிக்க வைத்தால் பணமும் நேரமும் வீண்' என்று பலர் கூறியதாகவும் `உனக்கு நடிப்பு வராது என்று சொல்லிப் பல சினிமா கம்பெனிகளில் துரத்தியதாகவும்' தனது ஆரம்பகால அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

நவாசுதீன் சித்திக்
நவாசுதீன் சித்திக்

இது குறித்து விரிவாகப் பேசிய நவாசுதீன், "நான் எங்கு சென்றாலும், நான் பார்ப்பதற்கு ஒரு நடிகன்போல் இல்லை, அதனால் வேறு ஏதாவது வேலை தேடிக் கொள்ளுங்கள் என்று என்னிடம் சொல்வார்கள். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கேட்கும் போது, ​​அவர்கள் என்னிடம் 'உன்னை நடிக்க வைக்க முடியாது, ஏனென்றால் அதற்கு அதிக நேரம் எடுக்கும். அப்படி அதிக நேரம் எடுத்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் நீங்கள் வேறு ஏதாவது முயற்சி செய்வது நல்லது' என்று கூறுவார்கள்.

பிறகு சினிமாவில் வேலை தேட முடிவு செய்தேன். அங்கு 40 விநாடிகள், ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் போன்ற கட்சிகளில் தோன்றுவேன். இப்படியே ஒரு முழு காட்சிகூட நடிக்காமல் 5-6 வருடங்கள் சென்றது. பின்னர் எனக்கு இரண்டு காட்சிகள் வர ஆரம்பித்தன. ஐந்து வருடங்கள் இப்படியே தொடர்ந்தது. அதன் பின் அலுவலகங்கள்தோறும் சென்று வாய்ப்புக் கேட்டு அலைந்தேன். 9-10 ஆண்டுகள் சென்ற பிறகு எதார்த்தமான படங்களை எடுக்கும் இயக்குநர்கள் வந்தனர். அவர்களைப் போன்றவர்களால் நாங்கள் வெளியேவரத் தொடங்கினோம். வருத்தம் என்னவென்றால் அப்படியான படங்கள் இங்கு வேலை செய்யவில்லை, ஆனால் அவை திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றன. அப்போதுதான் கமர்ஷியல் பட தயாரிப்பாளர்கள் எங்களை நல்ல நடிகர்கள், உண்மையானவர்கள் என்று நினைத்து எங்களைப் போன்றவர்களை நடிக்க வைக்க முடிவு செய்தனர். எங்களை வைத்து படம் தயாரித்தார்கள். அப்படித்தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது." என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism