Published:Updated:

"நவாசுதின் சித்திக்கியின் அன்பு புரிந்தது... இனி விவாகரத்து தேவையில்லை!" - மனைவி ஆலியா

நவாசுதீன் சித்திக்கி, ஆலியா
நவாசுதீன் சித்திக்கி, ஆலியா

நவாசுதீன் சித்திக்கி மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார் அவர் மனைவி ஆலியா!

பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக்கியின் (Nawazuddin Siddiqui) மனைவி ஆலியா (Aaliya) கடந்தாண்டு அவரிடம் இருந்து விவாகரத்துக் கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். நவாசுதின் சித்திக்கி மற்றும் அவரது சகோதரர் இருவர் மீதும் பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார் ஆலியா. ஆனால், இந்த வழக்கில் திடீர் திருப்பமாகத் தற்போது தன் முடிவை மாற்றி, விவாகரத்து வழக்கை திரும்பப் பெறப்போவதாக அறிவித்திருக்கிறார் ஆலியா.

"கடந்த பத்து நாட்களாக நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் தனிமையில் இருந்து வருகிறேன். இந்த நேரத்தில் லக்னோவில் படப்பிடிப்பில் இருக்கும் நவாஸ் குழந்தைகள் யானி மற்றும் ஷோரா இருவரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்.

Nawazuddin Siddiqui, Aaliya
Nawazuddin Siddiqui, Aaliya
கமலின் மூன்றாவது அணியில் இடம்பெறும் கட்சிகள் எவையெவை..?! - தேர்தல் அப்டேட்

படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கும் இந்த நேரத்திலும், என்னை அவ்வப்போது போனில் அழைத்து நலம் விசாரிக்கிறார். இதற்கு முன்னர் அவர் தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. தற்போது நவாசுதினின் மற்றொரு முகம் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. எங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளைக் களைய முயன்று கொண்டிருக்கிறோம். இந்த கொரோனா லாக்டெளன் எனக்கு வாழ்க்கையில் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. நவாசுதினின் அன்பு எனக்குப் புரிகிறது. எப்போதுமே அவர் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். எங்களின் குழந்தைகள் நாங்கள் சேர்ந்துவாழ விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பமே எங்கள் விருப்பமும். அதனால் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெறப்போகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார் ஆலியா.

"என்னுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பொதுவில் பேச விரும்பவில்லை. எங்கள் இருவரது தனிப்பட்ட பிரச்னைகளால் எங்கள் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது. அதேபோல் ஆலியாவோடு எனக்கு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவரை கவனித்துக்கொள்ளவேண்டியது என் கடமை. ஒரு நல்ல அப்பாவாக என் கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறேன்" என நவாசுதின் சித்திக்கியும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு